கவின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘டாடா’ திரைப்படத்தின் மூலம், திரையுலகில் நன்கு அறியப்பட்டவர் இயக்குநர் கணேஷ் கே பாபு. தற்போது, ரவிமோகன் நடித்து வரும் திரைப்படத்தினை இயக்கி வருகிறார். இதைத் தொடர்ந்து, ‘Draft by GKB’ என பெயரிடப்பட்ட திரைப்படத்தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார்.
‘Draft by GKB’ நிறுவனம் தயாரிக்கும் முதல் திரைப்படத்தில், கௌதம் ராம் கார்த்திக் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அஞ்சனா நேத்ரன் நடிக்கவிருக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் செல்வராகவன் நடிக்க, இவர்களுடன் மற்ற கதாபாத்திரங்களில் ராபி, பி. வாசு, ஏ. வெங்கடேஷ், மாறன், இந்துமதி, ஆதித்யா கதிர், பாக்கியம் சங்கர் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இத்திரைப்படத்தை, இயக்குனர் ராஜு முருகனின் உதவியாளரான, அறிமுக இயக்குநர் தினா ராகவன் இயக்குகிறார். இன்னும் பெயரிடப்படாத இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது. இதில் இயக்குநர்கள் H. வினோத், ராஜு முருகன் மற்றும் தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கே செந்தில் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இயக்குநரும், ‘Draft by GKB’ நிறுவனத்தின் தயாரிப்பாளருமான கணேஷ் கே பாபு கூறியதாவது,
‘கௌதம் ராம் கார்த்திக்கு, இந்தப்படம் முக்கியமானதாக இருக்கும். சாமனியனின் அரசியல் வாழ்க்கையை நகைச்சுவையாக சொல்லும் இத்திரைப்படம், கௌதம் ராம் கார்த்திக்கை பார்வையாளர்கள் நீண்டநாள் நினைவில் நிறுத்திக் கொள்ளக்கூடியதாக அமையும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.’ என்றார்.
ராஜு முருகன் வசனம் எழுத, இசையமைத்திருக்கிறார், சாம் சிஎஸ். ஒளிப்பதிவு, பிரதீப் காளிராஜா.