‘நிர்வாகம் பொறுப்பல்ல’  –  விமர்சனம்!

கார்த்தீஸ்வரன் , ஸ்ரீநிதி, ஆதவன் , லிவிங்ஸ்டன், பிளாக் பாண்டி, மிருதுளா சுரேஷ், அகல்யா வெங்கடேசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார், கார்த்தீஸ்வரன். இசையமைத்திருக்கிறார், ஸ்ரீகாந்த் தேவா. ஒளிப்பதிவு செய்திருக்கிறார்,  என்.எஸ். ராஜேஷ்.

பொதுமக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் வகையில் ஒரு பொழுது போக்கு படமாக வந்திருக்கிறது. இந்த ‘நிர்வாகம் பொறுப்பல்ல’ திரைப்படம்.

தன்னுடைய அடையாளத்தை வெளிப்படுத்தாமல், பணம் இரட்டிப்பு, அதிக வட்டி, ஆன்லைன் மோசடி, என பலமொசடிகள் செய்து வருபவர், நாயகன் கார்த்தீஸ்வரன். 5 ஆயிரம் கோடிகளுக்கு மேல், மக்களிடம் கொள்ளையடித்த பணத்துடன் வெளிநாடு செல்ல தயாராகிறார். அப்போது, காவல் ஆய்வாளர் ஸ்ரீநிதியை ஒரு சந்தர்ப்பத்தில் சந்திக்கிறார்.  அந்த சந்திப்பில் கார்த்தீஸ்வரன் கொள்ளை குறித்து தெரிய வருகிறது. ஶ்ரீநிதி, கார்த்தீஸ்வரனை கைது செய்யதிட்டமிடுகிறார். இது தெரிந்து அவரிடமிருந்து கார்த்தீஸ்வரன் தப்பினாரா, இல்லையா? என்பதே, ‘நிர்வாகம் பொறுப்பல்ல’ படத்தின் மீதிக் கதை.

கார்த்தீஸ்வரன், ‘கே’ எனும் மோசடிக் கும்பலின் தலைவராக நடித்திருக்கிறார். தனது தோற்றத்தை பற்றி அதிகம் கவலைப்படவில்லை. என்பது நன்றாக தெரிகிறது. சினிமாவின் மீதிருக்கும் ஆர்வ மிகுதியின் காரணமாக, டான்சிலும், ஃபைட்டிலும் முழுத்திறமையையும் காட்டியிருக்கிறார்.  வித விதமான கெட்டப்புகளில் வந்து கொள்ளையடிக்கிறார். ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள். என்றும் தத்துவமும் பேசியிருகிறார்.

போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் நடிகை ஸ்ரீ நிதி, கம்பீரம் பிளஸ் வசீகரம். கே யின், காதலி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை மிருதுளா சுரேஷ் ஒரு பாடல், சில காட்சிகள். ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசையில் துள்ளல் பாடல்கள். டைட்டில் மியுசிக் நன்றாக இருக்கிறது. என் எஸ் ராஜேஷின் ஒளிப்பதிவில் காட்சிகள் நன்றாக இருக்கின்றன.

‘நிர்வாகம் பொறுப்பல்ல’ – பேராசை மக்களிக்கான எச்சரிக்கை!