பொதுவாக திரைப்படங்கள் வெளியாகும்போது அதை சினிமா ரசிகர்களிடமும் மக்களிடமும் கொண்டு சேர்க்க பலவகையான விளம்பர உத்திகளை செய்வார்கள். அதில் அந்தந்த படங்களில் நடித்த, நடிகர் நடிகையர் கலந்து கொள்வார்கள். அல்லது நடிகர் நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்களை வைத்து புதுமையான விளம்பரங்கள் செய்வார்கள். ஆனால் பலவகையான க்யூட்டான செல்லப்பிராணிகளால் வைரலாகிக்கொண்டிருக்கிறது, பரியேறும் பெருமாள் திரைப்படம்.
பரியேறும் பெருமாள் படத்தில் கருப்பி எனும் நாய், கதாநாயகன் கதிரின் நண்பன் என்று சொல்லும் அளவுக்கு முக்கிய கதாபாத்திரமாக நடித்திருக்கிறது. அதை வைத்து பரியேறும் பெருமாள் பெட் (#PariyerumPerumalPet) என்ற ஹேஷ்டேக்குடன் உங்கள் வீட்டு செல்லப்பிராணிகளை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றுங்கள் என்று பரியேறும் பெருமாள் படக்குழுவினர் அழைத்தார்கள். அதனைத்தொடர்ந்து சினிமா பிரபலங்கள் உள்பட உலகமெங்கிலும் உள்ள பலர் தங்கள் வீட்டு செல்லப்பிராணிகளுடன் புகைப்படம் எடுத்து அந்த செல்லப்பிராணிகளுக்கும் அவர்களுக்கும் உள்ள சுவாரஸ்யமான உறவையும் பற்றி பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள்.
இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் செப்டம்பர் 28ம் தேதி வெளியாகும் பரியேறும் பெருமாள் திரைப்படம் செல்லப்பிராணிகளால் உலக அளவில் வைரலாகிக்கொண்டிருக்கிறது.