‘குளோபல் பிக்சர்ஸ்’ அழகராஜ் ஜெயபாலன் தயாரிப்பில், உருவாகியிருக்கும் பல்ஸ் திரைப்படத்தை நவீன் கணேஷ் இயக்கியிருக்கிறார். மாஸ்டர் மகேந்திரன் நாயகனாக நடித்திருக்கிறார். கூல் சுரேஷ், அர்ச்சனா, KPY சரத் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். அபிஷேக் A R இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் டீஸர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அவ்விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள் பேசியதாவது :
நடிகை அர்ச்சனா பேசும்போது,
“மாதவிடாய் என்பது எந்த வகையிலும் தீட்டு அல்ல. அது கடவுள் பெண்களுக்கு கொடுத்த ஒரு வரம். அதுவே பெண்களை தாயாக மாற்றும் அடிப்படை. அதில் அவமானப்பட வேண்டிய எந்த விஷயமும் இல்லை,” . பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது, எனக்கு ஏற்பட்ட உடல் வலியை புரிந்து கொண்டு, ஒரு சகோதரராக கூல் சுரேஷ் அண்ணன் எனக்கு உதவி செய்தார். பெண்கள் அந்த காலகட்டத்தில் அனுபவிக்கும் உடல் வலி மற்றும் மனநிலை மாற்றங்களை புரிந்து கொள்வது அவசியம். அத்தகைய புரிதலுடன் செயல்பட்ட ஒரு ஆணாக அவர் இருந்தது எனக்கு பெருமையாக உள்ளது. வெளியில் அவர் பேசும் விதம் வேறாக இருந்தாலும், அவருக்குள் மிகுந்த பாசமும் மனிதநேயமும் கொண்ட ஒரு அண்ணன் இருக்கிறார்,”.
படத்தின் ட்ரைலர் மிகவும் வலுவாகவும் பரபரப்பாகவும் இருந்தது. கதாநாயகன் மகேந்திரன் ஒவ்வொரு காட்சியிலும் காட்டிய உழைப்பும் அர்ப்பணிப்பும் பாராட்டத்தக்கது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சிகளில் அவர் செய்த துணிச்சலான முயற்சிகள் வியக்கத்தக்கவை,” என்று கூறினார்.
இயக்குனர் நவீன் கணேஷ் பேசும்போது,
“புதுமுக இயக்குனராக இருந்த என்னிடம் முழு நம்பிக்கை வைத்து, கதையின் மீது நம்பிக்கை வைத்து எந்த சமரசமும் இல்லாமல் படம் எடுக்க முழு ஆதரவு அளித்த தயாரிப்பாளருக்கு என் முதல் நன்றி. பட்ஜெட் குறித்து கவலைப்படாமல், படத்துக்குத் தேவையான அனைத்தையும் செய்து கொடுத்தார். ஹாஸ்பிட்டல் கதைக்களம் என்பதால் ரியல் லொகேஷன்களில் படமாக்கினோம். அதற்கு ஏற்ற வகையில் ஆர்ட் டைரக்டர் முகமது மிக இயல்பான செட் வடிவமைப்பை செய்துள்ளார். கன்னட திரையுலகில் முன்னணி எடிட்டராக இருக்கும் சோம் சேகர் இந்த படத்துக்கு பணியாற்றியது எனக்கு பெரிய பலம். ஒரு த்ரில்லர் படத்துக்கு மிக முக்கியமான எடிட்டிங்கை அவர் கிரிஸ்பாகவும் வேகமாகவும் வழங்கியுள்ளார்.
ஸ்டண்ட் மாஸ்டர் மிரட்டல் செல்வா பெயருக்கேற்ற வகையில் ஆக்சன் காட்சிகளை வடிவமைத்துள்ளார். குறிப்பாக கிளைமாக்ஸில் ரோப் மற்றும் டூப் இல்லாமல் மகேந்திரன் செய்த சண்டைக் காட்சி தியேட்டரில் நிச்சயம் கைத்தட்டல் பெறும்.
கதாநாயகன் மகேந்திரன், ஒரு உண்மையான ‘டைரக்டர்ஸ் ஆர்ட்டிஸ்ட்’. நான் நினைப்பதை திரையில் அப்படியே கொண்டு வருபவர். ‘ஓகே’ சொன்ன பிறகும் இன்னும் சிறப்பாக செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் மீண்டும் டேக் கேட்பது அவரது அர்ப்பணிப்பை காட்டுகிறது. அந்த உழைப்பே படத்தின் தரத்தை உயர்த்தியுள்ளது.

படத்தின் தலைப்பு, ‘பைல்ஸ்’ அல்ல, ‘பல்ஸ்’. மனிதனின் இதயத் துடிப்பு எப்படி தொடர்ச்சியாக இருக்கிறதோ, அதேபோல் இந்த படத்தை பார்க்கும் போது பார்வையாளர்களுக்கும் இடைவிடாத பதற்றம் இருக்கும். அதனால்தான் இந்த தலைப்பை தேர்வு செய்தோம். கூல் சுரேஷ் இந்த படத்தில் காமெடியைத் தாண்டி ஒரு முக்கியமான குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளதாகவும், நடிகர் சேது மற்றும் அர்ச்சனா விழாவுக்கு வந்து வாழ்த்தியதற்காக நன்றிகளையும் தெரிவித்தார்.
நடிகர் மகேந்திரன் பேசும்போது,
இயக்குனர் நவீன் எனக்கு பல வருடங்களாக பழக்கம். நாங்கள் இருவரும் பல பயணங்களை பகிர்ந்த நண்பர்கள். அவர் இந்த கதையை சொல்லும்போது, நான் முதலில் ஒரு நடிகராக இல்லாமல் ஒரு நண்பராகவே கேட்டேன். ஆனால் கதையை கேட்க கேட்க அதன் மீது இருந்த ஆர்வம் அதிகரித்தது. படத்தின் பின்னணி ஹாஸ்பிட்டல். ஒரு ரியல் ஹாஸ்பிட்டல் போலவே தோன்ற வேண்டும், அதே நேரத்தில் ஷூட்டிங்கிற்கும் ஏற்றதாக இருக்க வேண்டும். அந்த சவாலான பணியை ஆர்ட் டைரக்டர் முகமது மிக நேர்த்தியாக செய்துள்ளார். ஒரு புதுமுக குழுவை முழுமையாக நம்பி, எந்த கேள்விகளும் இல்லாமல் எங்களுக்கு சுதந்திரம் கொடுத்தது மிகப் பெரிய விஷயம். இன்றைய சூழலில் அந்த நம்பிக்கை கிடைப்பது அரிது. அந்த நம்பிக்கையை நாங்கள் காப்பாற்றுவோம்.
கூல் சுரேஷ், ஷூட்டிங் ஸ்பாட்டில் அவரின் இருப்பே ஒரு கலகலப்பை உருவாக்கும். படத்தில் அவர் காமெடியைத் தாண்டி ஒரு முக்கியமான குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார். ஸ்டண்ட் மாஸ்டர் மிரட்டல் செல்வா அளித்த தைரியமும் பாதுகாப்பும் காரணமாக, கிளைமாக்ஸ் காட்சிகளை இயல்பாக செய்ய முடிந்தது. அந்த முழு நம்பிக்கை அவருக்கே,” என்று நன்றியை தெரிவித்தார்.
படத்தின் பிஜிஎம் வெறும் பின்னணி இசை அல்ல; ஒவ்வொரு காட்சியிலும் பார்வையாளர்களின் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளது. ட்ரைலரில் கேட்டது ஒரு சிறிய முன்னோட்டம் மட்டுமே. படம் எல்லோருக்கும் பிடிக்கும் வகையில், சிறப்பாக வந்திருக்கிறது.’ என்றார்.