‘BTG Universal’ நிறுவனம் சார்பில், பாபி பாலச்சந்திரன்தயாரித்துள்ள படம், ரெட்ட தல. இதில் இரட்டை வேடங்களில் அருண் விஜய், நாயகனாக நடித்திருக்க அவருக்கு ஜோடியாக சித்தி இத்னானி நடித்திருக்கிறார். இவர்களுடன் தான்யா ரவிச்சந்திரன், ஹரீஷ் பேரடி, யோகேஷ் சாமி, ஜான் விஜய், பாலாஜி முருகதாஸ், யோக் ஜேபி, வின்செண்ட் அசோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். எழுதி இயக்கியிருக்கிறார், கிரிஷ் திருக்குமரன்.இசை, சாம் CS. ஒளிப்பதிவு , டிஜோ டாமி.
பாண்டிச்சேரியில் காளி ( அருண் விஜய்) எனும் சிறுவனும் ஆந்த்ரே ( சித்தி இத்னானி) எனும் சிறுமியும் ஆதரவற்ற நிலையில் ஒருவொருக்கொருவர் ஆதரவாக வளர்ந்து வருகின்றனர். சில வருடங்கள், வெவ்வேறு திசையில் பயணிக்கின்றனர். அதன் பிறகு வாலிப வயதை எட்டிய நிலையில், ஆந்த்ரேவை சந்திக்கும் காளி, அவர் மீது காதல் வயப்படுகிறார். ஹோட்டலில் வெயிட்டராக வேலை செய்துவரும் ஆந்த்ரே, பணமே பிரதானம். எண்ணும் மன நிலையில் இருக்கிறார். மேலும், சிறுவயதில் கஷ்டப்பட்ட சம்பவங்களை நினைவு கூறி, காளியின் காதலை ஏற்க மறுக்கிறார்.
இந்நிலையில், காளியைப் போன்ற தோற்றம் கொண்ட, பெரும் பணக்காரர் உபேந்திரா, காளியை சந்திக்கிறார். சந்தித்த அந்தத் தருணத்திலேயே, இருவரும் மிக நெருக்கமான நண்பர்களாகி விடுகின்றனர். அப்போது உபேந்திரா, தன்னுடைய வெளிநாட்டு சொகுசு காரையும், கிரெடிட் கார்டையும், காளியிடம் கொடுத்து மகிழ்ச்சியாக இருக்கும்படி சொல்கிறார். இந்த விஷயம் ஆந்த்ரேவுக்கு தெரிய வருகிறது. அவர்
காளியிடம், ‘உன்னைப் போலவே இருக்கும் உபேந்திராவை கொன்றுவிட்டு, அவரது உடைமைகளை கைப்பற்றி, சந்தோஷமாக சேர்ந்து வாழலாம்.’ என யோசனை கூறுகிறார். காளி என்ன செய்தார்? என்பதை, அதிரடி ஆக்ஷன் பிரியர்களுக்கு கொடுத்திருக்கிறார். இயக்குநர் கிரிஷ் திருக்குமரன்.

படம் துவங்கியவுடன், எதை நோக்கிச்செல்கிறது. என்பது தெரியாமலும், போதிய வேகமில்லாமல் செல்கிறது. அதன் பிறகு, காளியும், உபேந்திராவும் சந்தித்துக் கொள்ளும் காட்சிக்கு பிறகு க்ளைமாக்ஸ் வரை, விறுவிறுப்பாக செல்கிறது. சுவாரசியமான இரண்டு திருப்பங்கள் சபாஷ் போட வைக்கிறது. ஆனால், அதற்கான காரணம் நம்பும் படியாக இல்லாததால் ரசிக்க முடியவில்லை. பலவீனமான திரைக்கதை, இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் அருண்விஜய்யின் நடிப்பு வீணாகிப்போகிறது. காளி கதாபாத்திரத்தின் பின்புலம் லஜிக்கே இல்லாமல் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் உபேந்திராவின் கதாபாத்திரமும் சரியான விவரிப்பில்லாமல் தொக்கி நிற்கிறது.
காளி மற்றும் உபேந்திரா என இரட்டை வேடமேற்று நடித்திருக்கும் அருண்விஜய், கடுமையான உழைப்பினை கொட்டி நடித்திருப்பது ஆக்ஷன் காட்சிகளில், நன்றாக தெரிகிறது. ஸ்டைலிஷான உடல் மொழியில் ரசிகர்களை, வெகுவாக கவர்ந்து விடுகிறார். சித்தி இத்னாணியுடனான காதல் காட்சிகளை அதிகப்படுத்தியிருக்கலாம்.
ஆந்த்ரே, கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சித்தி இத்னாணி. அழகு பொம்மையாக வலம் வந்து ரசிகர்களை கவர்ந்திழுக்கிறார். நடிப்பதற்கான காட்சிகள் அதிகமில்லை.
ஜான் விஜய் வழக்கம்போல் எரிச்சலூட்டுகிறார். தான்யா ரவிச்சந்திரன், ஹரீஷ் பேரடி, யோகேஷ் சாமி, பாலாஜி முருகதாஸ், யோக் ஜேபி, வின்செண்ட் அசோகன் ஆகியோர் வீணடிக்கப்பட்டுள்ளனர்.
டிஜோ டாமியின் ஓளிப்பதிவு, ஸ்டைலிஷ்.
சாம்.சி.எஸ் இசையில், தனுஷ் பாடியிருக்கும் ‘கண்ணம்மா’ பாடல், ஓகே. பின்னணி இசை, பரவாயில்லை!
‘ரெட்ட தல’ – லாஜிக்கில்லாமல் ரசிக்கும் ஆக்ஷன் பிரியர்களுக்கு!