சமுத்திரகனி நடிப்பில் ‘தடயம்’ விரைவில் ZEE5-ல் மட்டும்!

இந்தியாவின் முன்னணி ஓடிடித் தளமான ZEE5 தமிழின் பிராந்திய ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில்,  தனது அடுத்த படைப்பான “தடயம்”  படைப்பின் அறிவிப்பை, இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைகளுக்கும், சமூகப் பார்வை கொண்ட நடிப்புக்கும் பெயர் பெற்ற சமுத்திரகனி, மீண்டும் ZEE5 ஓடிடி தளத்தில் ஒரு முக்கிய படைப்புடன் வருகிறார். “தடயம்” எனும் இந்த புதிய படைப்பு, விரைவில் ZEE5-ல் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நவீன் குமார் பழனிவேல் இயக்கத்தில், அஜய் கிருஷ்ணா தயாரிப்பில் உருவாகியுள்ள “தடயம்”, சமுத்திரகனியின் வலுவான நடிப்புத் திறனை மையமாகக் கொண்டு உருவான ஒரு தீவிரமான கதையம்சம் கொண்ட படைப்பாக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இதற்கு முன்னதாக, சமுத்திரகனி இயக்கி நடித்த “விநோதய சித்தம்” திரைப்படம் ZEE5-ல் வெளியானபோது, விமர்சகர்களிடமும் ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அந்தப் படம், வாழ்க்கை–மரணம், நேரம், மனித உறவுகள் போன்ற ஆழமான கருத்துகளை எளிய முறையில்,  தாக்கம் கொண்ட திரைக்கதையில் சொல்லி, ZEE5-யின் முக்கியமான தமிழ் படைப்புகளில் ஒன்றாக மாறியது.

அந்த வெற்றியின் தொடர்ச்சியாக, “தடயம்” திரைப்படமும் ZEE5 தமிழ் ரசிகர்களுக்கு ஒரு நினைவில் நிற்கும் அனுபவமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை உருவாகியுள்ளது. கதையின் விவரங்கள் இன்னும் முழுமையாக வெளியிடப்படாத நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள போஸ்டர் இப்படம் காவல்துறை பின்னணியில் ஒரு அழுத்தமான திரில்லராக இருக்கும் ஆவலைத் தூண்டுகிறது.  தமிழ் ரசிகர்கள் ஒரு புதிய பயணத்திற்கு தயாராகுங்கள். சமுத்திரகனி நடிப்பில் “தடயம்” – விரைவில் ZEE5-ல் மட்டும்.