‘ஹாட் ஸ்பாட் 2’ – (விமர்சனம்.) லிமிடெட் ஆக்சஸ்!

‘ஹாட் ஸ்பாட் 2’ , திரைப்படத்தில், பிரியா பவானி சங்கர், எம் எஸ் பாஸ்கர், தம்பி ராமையா, பிரிகிடா, பவானி ஸ்ரீ, ஆதித்யா பாஸ்கர், ரக்சன்,அஸ்வின், சஞ்சனா திவாரி, கே ஜே பாலமணி மார்பன், விக்னேஷ் கார்த்திக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விக்னேஷ் கார்த்திக் இயக்கியுள்ளார். ‘கே ஜே பி டாக்கீஸ்’ சார்பில்,  கே ஜே பாலு மணிமார்பன், அனீல் கே ரெட்டி தயாரித்துள்ளனர்.

விக்னேஷ் கார்த்திக், ‘ஹாட் ஸ்பாட்’  முதல் பாகத்தில்  கதை சொன்ன அதே தயாரிப்பாளரிடம் கதை சொல்ல வருகிறார், பிரியா பவானி சங்கர். அதன் பிறகு நடக்கும் எல்லா விஷயங்களும் அதே.. அதே! சற்று அதிர்ச்சியான சமாச்சாரங்களுடன், தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்திகள் என சொல்லப்படும் ரசிகர்களை தூங்கவிடாமல் செய்கிறது. இந்த ‘ஹாட் ஸ்பாட் 2’ , திரைப்படம்.

இயக்குநர் விக்னேஷ் கார்த்திக், தற்போதைய ஜென்-சி காலகட்ட காதல், பெண்களின் ஆடை சுதந்திரம், ஹீரோக்கள் வழிபாடு என அனைத்தையும் ஒரு சார்பாக பேசாமல் இரண்டு பக்கமும் பேசி, பரபரப்பினை ஏற்படுத்தியிருக்கிறார். அதையும் பட்டவர்த்தனமாக பேசியிருப்பது பாராட்டுக்குரியது.

‘ஹாட் ஸ்பாட்’  முதல் பாகத்திற்கு சென்சார் விதித்த கடும் கட்டுப்பாட்டின் காரணமாக கொஞ்சம் சேஃப்பாக விளையாடியிருக்கிறார். ஆந்தாலஜி பாணியில் அசத்தலாகவே படமாக்கியிருக்கிறார். உட்ச பட்ச ரசிகர்களின் மோதல் ரசிக்க வைப்பதுடன், அந்த ரசிகர்களை சிந்திக்க வைத்திருக்கிறார்.

ஆடை சுதந்திரம் எனும் பெயரில் வலம் வரும் பெண்களையும் ஏகமாக சாடியிருக்கிறார்.

ஜென்-சி , தலைமுறையினரின் காதல் சார்ந்த காமம் பலருக்கு தலை சுற்றலை ஏற்படுத்தும்.

தயாரிப்பாளரிடம் கதை சொல்லும் கதாபாத்திரத்தில் பிரியா பவானி சங்கர், நடிப்பதற்கு பெரிதாக வாய்ப்புகள் இல்லை. கிடைத்த காட்சிகளில் தன்னை நிலை நிறுத்த முயற்சித்துள்ளார்.

தம்பி ராமையா, மகளிடம் ஆடை விஷயத்தில் போராடும் காட்சியும் அதற்கு பதிலடியாக அவர் செய்யும் செயலும் தியேட்டரில் பெரும் சிரிப்பலையை உருவாக்கி சிந்திக்க வைக்கிறது.

எல்லோரை விடவும் அல்ட்டிமேட்! எம் எஸ் பாஸ்கர் தான். உட்ச பட்ச நடிகர்களின் ரசிகர்களை ஓடவிடுகிறார்.

அஷ்வின், ஆதித்யா பாஸ்கர், ரக்‌ஷன், இயக்குநர் விக்னேஷ் கார்த்திக், தயாரிப்பாளர் கே.ஜெ.பாலமணிமர்பன், பவானி ஸ்ரீ, பிரிகிடா, சஞ்சனா திவாரி ஆகியோர் கவனம் பெறும் வகையில் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர்கள் ஜெகதீஷ் ரவி மற்றும் ஜோசப் பால் இருவரும் கவனம் பெறுகிறார்கள். சதிஷ் ரகுநாதன் இசை படத்தின் பலம்.

எழுதி இயக்கியிருக்கும் விக்னேஷ் கார்த்திக், கலகலப்பான திரைக்கதை மூலம் மீண்டும் சிந்திக்க வைக்கும் பல விஷயங்களை பேசி, அவரவர் முடிவுக்கே விட்டுள்ளார்.

‘ஹாட் ஸ்பாட் 2’ –  லிமிடெட் ஆக்சஸ்!