ZHEN STUDIOS தயாரிப்பில், இன்றைய நவீன கால காதலை மையமாக வைத்து இயக்குநர் அசோக்குமார் கலைவாணி இயக்கத்தில், இன்றைய இளைஞர்களின் வாழ்வை காதலை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம்”நீ Forever”. இப்படம் வரும் மார்ச் 27-ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது. “தருணம்” என்ற வெற்றிப் படத்தைத் தொடர்ந்து, தயாரிப்பாளர்கள் புகழ் மற்றும் ஈடன் ஆகியோரின் இரண்டாவது தயாரிப்பாக இப்படம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வு, அன்மையில் நடைபெற்றது.
இந்நிகழ்வினில்..
இசையமைப்பாளர் அஸ்வின் ஹேமந்த் பேசியதாவது..,
முதலில் இந்த வாய்ப்பை கொடுத்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் அசோக் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. இந்த படம் எங்களுக்கு சுமார் இரண்டு வருட பயணம். நாங்கள் ஒரு சிறிய குழுவாக பெரிய கனவுடன் இந்த படத்தை உருவாக்கியிருக்கோம். நான் நினைத்ததை எந்த கட்டுப்பாடும் இல்லாமல் செய்ய வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி. எடிட்டர் மற்றும் டீம் முழுவதும் சேர்ந்து வேலை செய்ததால், இசை மற்றும் காட்சிகள் இன்னும் சிறப்பாக வந்திருக்கிறது. நடிகர்கள் சுதர்ஷன், அர்ச்சனா, சினேகா உள்ளிட்ட அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். தொழில்நுட்ப குழுவும் மிகுந்த உழைப்புடன் இந்த படத்தை உருவாக்கியிருக்கிறது. இது ஒரு புதிய கான்செப்ட்டுடன், புதிய அனுபவத்தை தரும். என்றார்.
நடிகர் பிரதோஷ் பேசியதாவது..,
“ராக்கி” என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். என்னை நம்பி இந்த வாய்ப்பு கொடுத்த இயக்குநர் அசோக் மற்றும் தயாரிப்பாளர் புகழ் சார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. இந்த படம் எங்களுக்கு மிகவும் ஸ்பெஷல். படத்திற்காக இயக்குநர் மிகவும் உழைத்துள்ளார். அந்த உழைப்புக்காக இந்த படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்று நம்புகிறேன். நடிகர்கள் சுதர்ஷன், அர்ச்சனா, சினேகா மற்றும் முழு குழுவினரும் அருமையாக வேலை செய்திருக்கிறார்கள். இந்த படம் காதல், நகைச்சுவை, குடும்ப உணர்வுகள் கலந்து இருக்கும் ஒரு நல்ல பொழுதுபோக்கு படம். எல்லா தலைமுறையினரும் ரசிக்கக்கூடியதாக இருக்கும். என்றார்.
நடிகர் ஹரி பாஸ்கர் பேசியதாவது..,
டிரெய்லரும் பாடல்களும் பார்த்தபோது மிகவும் ஆச்சரியமாகவும், புதுமையாகவும் இருந்தது. குறைந்த நாட்களில் எந்த அழுத்தமும் இல்லாமல் இப்படத்தை அழகாக உருவாக்கியிருப்பது மிகவும் பாராட்டத்தக்கது. புகழ் சார் ஐடி துறையிலிருந்து சினிமாவுக்கு வந்து, மிகுந்த ஆர்வத்துடன் நல்ல படங்களை உருவாக்கிக் கொண்டிருப்பது மிகவும் சிறப்பு. இந்த படம் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என்று நம்புகிறேன். என்றார்.

நடிகர் YG மகேந்திரன் பேசியதாவது..,
சமீப காலமாக எனக்கு வித்தியாசமான கதாபாத்திரங்கள் கிடைத்து வருவது மிகவும் சந்தோஷம். இந்த “நீ Forever” படத்தின் குழு ஒரு வெற்றி குழு என்று நான் நம்புகிறேன். இயக்குநர் அசோக் முதலில் கதையை சொன்னபோது அவருடைய நம்பிக்கை எனக்கு மிகவும் பிடித்தது. நல்ல கதையை நம்பிக்கையுடன் எடுத்திருக்கிறார்கள். இந்த படம் இளைஞர்களை நிச்சயமாக கவரும். பழமை மற்றும் புதுமை இரண்டையும் அழகாக இணைத்து இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். நல்ல கதை இருந்தால் சிறிய படங்களும் பெரிய வெற்றி பெறும் என்பதற்கு இது ஒரு உதாரணமாக இருக்கும். இசை, ஒளிப்பதிவு, காட்சியமைப்பு அனைத்தும் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. இந்த படம் கண்டிப்பாக வெற்றி பெறும். என்றார்.
நடிகை அர்ச்சனா ரவி பேசியதாவது..,
இந்தக் கதையை முதன்முதலில் கேட்டபோது மிகவும் ஆச்சரியமாகவும், உற்சாகமாகவும் இருந்தது. பாடல்கள், காட்சிகள் எல்லாமே எனக்கு மிகவும் பிடித்தது. இயக்குநர் அசோக் எனக்கு ஒரு சிறந்த கதாபாத்திரம் கொடுத்து, என்னை இன்னும் நன்றாக நடிக்கத் தூண்டினார். படப்பிடிப்பில் நிறைய சுவாரஸ்யமான அனுபவங்கள் இருந்தது, குறிப்பாக சுதர்ஷனுடன் வேலை செய்தது மிகவும் மகிழ்ச்சி. தயாரிப்பாளர் புகழ் சார் மற்றும் ஈடன் மேம் மிகவும் ஆதரவாக இருந்தார்கள். எங்களுக்கு தேவையான எல்லாவற்றையும் கொடுத்து, சுதந்திரமாக வேலை செய்ய வைத்தார்கள். இந்த படத்தில் உள்ள அனைத்து நடிகர்களுடனும் வேலை செய்தது ஒரு நல்ல அனுபவம். குறிப்பாக சினேகா எனக்கு ஒரு நல்ல நண்பராக இருந்தார். என்றார்.
இயக்குநர் அசோக்குமார் கலைவாணி பேசியதாவது..,
இங்கே வந்துள்ள பத்திரிகை, சமூக வலைத்தளம் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. நான் எப்போதும் நம்புவது ஒன்று தான் – ஒரு நல்ல விஷயம் செய்ய நினைத்தால், அது கண்டிப்பாக நடக்கும். இந்த படம் அதற்கான ஒரு உதாரணம். நான் சினிமாவுக்கு ஆசைப்பட்டு சின்ன சின்ன முயற்சிகள் செய்தேன். அதன் மூலம் புகழ் சார் தொடர்பு கிடைத்தது. அவர் மூலம் தான் இந்த வாய்பு கிடைத்தது. இந்த படத்திற்காக எங்கள் முழு குழுவும் மிகுந்த உழைப்புடன் வேலை செய்திருக்கிறோம். சுதர்ஷன் மிக நன்றாக நடித்துள்ளார். நல்ல நண்பர். அர்ச்சனா ஹீரோயின் என்பதை விட நல்ல கதாப்பாத்திரம் அவர் மிகச்சிறப்பாக செய்துள்ளார். YG மகேந்திரன் சார், நிழல்கள் ரவி சார் போன்ற ஆளுமைகளுடன் வேலை பார்த்தது, நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது. இசையமைப்பாளர் அஸ்வின் ஹேமந்த் இசை படத்திற்கு பெரிய பலம். ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாச்சார்ஜி மிகப்பெரிய உறுதுணையாக இருந்தார். எடிட்டிங், கொரியோகிராஃபி என அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் மிகச்சிறப்பான பங்களிப்பை தந்துள்ளனர். இப்படத்திற்காக புகழ் சார் என்னை முழுமையாக நம்பினார். அவர் நெட்பிளிக்ஸ் படத்தை வாங்கி விட்டார்கள் என்று சொன்ன போது மகிழ்ச்சியாக இருந்தது.
இன்றைய Gen-Z தலைமுறை உலகத்தை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. நவீன டேட்டிங் ஆப் மூலம் இணையும் ஒரு ஜோடியும், அவர்களின் வாழ்வில் அதனால் ஏற்படும் விளைவுகளும் தான், இப்படத்தின் கதை. அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும்படி, காமெடி, ரொமான்ஸ் கலந்து அழகான லவ் டிரமாவாக இப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படம் கண்டிப்பாக ரசிகர்களை ஏமாற்றது. என்றார்.