‘ராவடி’ படத்தின் படப்பிடிப்பு  நிறைவடைந்தது!

‘செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ’  S. S. லலித் குமார் தயாரிப்பில், நடிகர்கள் பஸில் ஜோசப் & L. K. அக்ஷய் குமார் நடித்த ‘ராவடி; படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து, தற்போது எடிட்டிங், பின்னணி இசை, VFX உள்ளிட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் சென்னை மற்றும்  ஒகேனக்கல் பகுதியில் படமாக்கப்பட்டுள்ளன. அறிமுக இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்கியிருக்க, லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜென் மார்ட்டின் இசையமைத்திருக்கிறார். கோடை காலத்தில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.