KRG Kannan Ravi Group சார்பில் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி தயாரிப்பில், உமாபதி ராமையா இயக்கத்தில், நட்டி நட்ராஜ் நாயகனாக நடிக்க, பரபரப்பான பொலிடிகல் காமெடி கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள திரைப்படம் “TN 2026” தங்க நட்சத்திரம். இப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி திரை ரசிகர்கள் மட்டுமல்லாது பொதுமக்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், அரசியல் மாநாடு போல வடிவமைக்கப்பட்ட பிரம்மாண்ட அரங்கில், கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில்..KRG Kannan Ravi Group சார்பில் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி தயாரிப்பில், உமாபதி ராமையா இயக்கத்தில், நட்டி நட்ராஜ் நாயகனாக நடிக்க, பரபரப்பான பொலிடிகல் காமெடி கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள திரைப்படம் “TN 2026” தங்க நட்சத்திரம். இப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி திரை ரசிகர்கள் மட்டுமல்லாது பொதுமக்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், அரசியல் மாநாடு போல வடிவமைக்கப்பட்ட பிரம்மாண்ட அரங்கில், கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வினில், இயக்குநர் உமாபதி ராமையா பேசியதாவது..,
முதலில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி சார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. இந்த திரைப்படம் இவ்வளவு நன்றாக உருவாக அவரின் ஆதரவு மிக முக்கியம். அவர் எங்களுக்கு முழு சுதந்திரத்தையும் நம்பிக்கையையும் கொடுத்தார். அதேபோல் தீபக் ரவி சார் அவர்களும் எப்போதும் உற்சாகம் அளித்து ஆதரித்தார். இந்த படத்தில் உழைத்த அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் நன்றி. இசையமைப்பாளர் தர்புகா சிவா, எடிட்டர், ஃபைட் மாஸ்டர், கோரியோகிராஃபர்கள் மற்றும் காஸ்ட்யூம் டிசைனர் அனைவரின் பங்களிப்பும் சிறப்பானது. அவர்களின் ஒத்துழைப்பால்தான் இந்த படம் சிறப்பாக உருவாகியுள்ளது. போஸ்ட் புரொடக்ஷன் டீம் மற்றும் சிஜி டீமிற்கும் என் நன்றி. நாள்-இரவு உழைத்து இந்த படத்தை முழுமையாக்கி வருகிறார்கள்.
இந்த படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. எம்.எஸ். பாஸ்கர் சார், இளவரசு சார் போன்ற பெரிய கலைஞர்கள் ஒரு புதிய முயற்சிக்காக எங்களை ஆதரித்தது மிகப் பெரிய விஷயம். அவர்கள் எந்த தயக்கமும் இல்லாமல் முழு உற்சாகத்துடன் நடித்தார்கள். நட்டி சார் இந்த படத்தில் மிகவும் வித்தியாசமான நடிப்பை காட்டியுள்ளார். பல கெட்டப்புகளில் அவர் கடுமையாக உழைத்துள்ளார். அவரது நடிப்பு இந்த படத்தின் முக்கிய பலமாக இருக்கும். இந்த படத்தில் யாரையும் குறிவைத்து எதுவும் செய்யப்படவில்லை. இது ஒரு பொழுதுபோக்கு அரசியல் படம் மட்டுமே. சினிமாவாக பார்த்தால் நீங்கள் நிச்சயம் ரசிப்பீர்கள். எல்லோரும் வந்து சிரித்து மகிழும் வகையில் இந்த படம் உருவாகியுள்ளது. அதனால் அரசியல் கோணத்தில் பார்க்காமல், ஒரு நல்ல படமாக பார்த்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய அனைவருக்கும் என் நன்றி.

தம்பி ராமையா பேசியதாவது..,
எல்லாருக்கும் என் மனமார்ந்த வணக்கம். இந்த இனிய நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இந்த மேடையில் பேசுவதற்கு காரணம் என் குடும்பமும், எனக்கு கிடைத்த ஆதரவும்தான். இந்த படத்தின் உருவாக்கத்துக்கு முக்கிய காரணம் தயாரிப்பாளர் கண்ணன் ரவி அவர்களின் நம்பிக்கை. சினிமாவை வெறும் தொழிலாக அல்ல, ஒரு ஆர்வமாக எடுத்துக்கொண்டவர். அவரின் அனுபவமும், பரந்த சிந்தனையும் இந்த படத்திற்கு பெரிய பலம். இந்த கதையை அரசியல் பின்னணியில் உருவாக்கியுள்ளோம். அது ஒரு குடும்ப அனுபவத்திலிருந்து வந்த புரிதலால் உருவானது. அரசியல் என்பது வாழ்க்கையோடு கலந்த ஒரு உண்மை என்பதையும் காட்டுகிறது. இந்த படத்தில் உள்ள ஒவ்வொரு கலைஞரும் தனித்திறமையுடன் இணைந்துள்ளனர். நட்டி சார் போன்றவர்கள் தங்கள் அர்ப்பணிப்பால் கதாபாத்திரத்தை உயர்த்தியுள்ளனர். எம்.எஸ். பாஸ்கர் சார், இளவரசு சார் போன்ற அனுபவமிக்க கலைஞர்கள் இந்த படத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளனர். இது ஒரு குழு முயற்சியாக உருவான படம். எல்லோரும் சேர்ந்து உழைத்ததால்தான் இவ்வளவு அழகாக உருவாகியுள்ளது. ஒரு படத்தை உருவாக்குவது என்பது பொறுப்பும், உணர்ச்சியும் சேர்ந்த ஒன்று. அதில் யாருடைய மனதையும் புண்படுத்தாமல் சொல்ல வேண்டியதை சொல்ல வேண்டும். அந்த பொறுப்புடன் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இயக்குனர் உமாபதி இந்த படத்தின் மூலம் தன்னை நிரூபித்துள்ளார். அவருடைய உழைப்பு மற்றும் திறமை இந்த படத்தில் தெளிவாக தெரியும். இந்தப்படம் யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை, எனக்கு எல்லா கட்சியிலும் நண்பர்கள் இருக்கிறார்கள். ஒரு விஷயத்தை தெளிவாக சொல்ல விரும்புகிறேன். மேலோட்டமாக கிடைக்கும் தகவல்களை வைத்து உடனே முடிவுக்கு வர வேண்டாம். இந்த படம் யாரையும் புண்படுத்தும் வகையில் எடுக்கப்படவில்லை.
தம்பி ஆதவ் அர்ஜுனா அதைப் புரிந்துகொள்ள வேண்டும். யாரையும் சங்கடப்படுத்தும் நோக்கம் இதில் இல்லை. அதை நீங்கள் படம் பார்த்த பிறகு நிச்சயமாக புரிந்துகொள்வீர்கள். மீடியா நண்பர்களிடம் ஒரு சிறிய வேண்டுகோள். பல ஆண்டுகளாக எங்களுடைய இந்த முயற்சி தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த படத்தை முழுமையாக பார்த்த பிறகு உங்கள் கருத்தை சொல்லுங்கள். இந்த படம் வெளியாகும் நாளில் நீங்கள் பார்த்து, உங்களுக்குப் பிடித்திருந்தால் பாராட்டுவீர்கள் என்று நம்புகிறேன். ஒரு தந்தையாக எனக்கு கிடைத்த மகிழ்ச்சி – என் மகன் தனது உழைப்பால் இந்த நிலைக்கு வந்திருக்கிறான் என்பதுதான். அதை நீங்கள் உணர்ந்தால் அதுவே எனக்கு மிகப்பெரிய சந்தோஷம். இந்த படத்தை எல்லாரும் பார்த்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி, வணக்கம்.
நடிகர் நட்டி நட்ராஜ் பேசியதாவது..,
எல்லாருக்கும் என் மனமார்ந்த மாலை வணக்கம். முதலில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி சார், தீபக் ரவி சார் அவர்களுக்கு நன்றி. அதேபோல் இந்த படத்தில் உழைத்த அனைத்து உதவி இயக்குனர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினருக்கும் என் நன்றி. இயக்குனர் உமாபதி சார் பற்றி சொல்ல வேண்டுமென்றால், அவர் மிகவும் கடின உழைப்பாளி மற்றும் கட்டுப்பாட்டுடன் வேலை வாங்கும் இயக்குனர். இன்னும் சில ஆண்டுகளில் இந்திய அளவில் பெரிய இயக்குனர்களின் பட்டியலில் அவர் இடம்பிடிப்பார் என்று நான் நம்புகிறேன்.

இந்த படத்தில் நான் நடித்தது ஒரு பெருமை. ஏனெனில் இரண்டு தேசிய விருது பெற்ற நடிகர்களுடன் நான் நடித்திருக்கிறேன். தம்பி ராமையா அண்ணா மற்றும் எம்.எஸ். பாஸ்கர் சார் – இருவரிடமிருந்தும் நான் நிறைய கற்றுக்கொண்டேன். அதோடு இளவரசு சார், சித்ரா மேடம், விஜி மேடம் உள்ளிட்ட அனைத்து கலைஞர்களும் அருமையாக நடித்துள்ளனர். இயக்குனர் உமாபதி சார் ரிகர்சல் முதல் ஷூட்டிங் வரை ஒவ்வொரு விஷயத்தையும் மிக நுணுக்கமாக கவனிப்பார். அவர் வேலை செய்யும் விதம் மிகவும் வித்தியாசமானது. அவருடன் வேலை செய்தது ஒரு நல்ல அனுபவம். இந்த படத்தின் கதை கேட்டவுடன் எனக்கு மிகவும் பிடித்தது. அரசியலை ஒரு புதிய கோணத்தில் சொல்லும் முயற்சி இது.
எம்.எஸ். பாஸ்கர் சார் போன்ற பெரிய கலைஞர்கள் இந்த படத்தில் இருக்கிறதே ஒரு பெரிய பலம். அவர்களுடன் சேர்ந்து நடித்தது எனக்கு ஒரு ஆசீர்வாதம். இந்த படம் யாரையும் குறிவைத்து எடுக்கப்படவில்லை. இது முழுக்க முழுக்க ஒரு பொழுதுபோக்கு படம். முதல் ஃப்ரேமிலிருந்து கடைசி ஃப்ரேம் வரை நீங்கள் சிரித்து மகிழ்வீர்கள். அதனால் தயவு செய்து வேறு கோணத்தில் பார்க்காமல், ஒரு நல்ல படமாக பார்த்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். எல்லாருக்கும் நன்றி. வணக்கம்.
அரசியல் கலந்த சமூக அக்கறை மிக்க கருத்துக்களுடன் அனைவரும் ரசிக்கும் கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது. தம்பி ராமையா கதை எழுதியுள்ள இப்படத்தை திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார் உமாபதி ராமையா. தமிழ் திரையுலகில் தரமான வெற்றிப் படங்களை தொடர்ந்து வழங்கி வரும் KRG Kannan Ravi Group சார்பில் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி இப்படத்தை தயாரித்துள்ளனர்.
நட்டி நட்ராஜ் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில், சிருத்தா ராவ், சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த் நாயகிகளாக நடித்துள்ளனர். எம். எஸ். பாஸ்கர், இளவரசு, தம்பி ராமையா ஆகியோர் முதல் முறையாக இணைந்து நடித்துள்ளனர். மேலும் ரெடின் கிங்ஸ்லி, லொள்ளு சபா மாறன், பிக்பாஸ் முத்துக்குமரன், ஆதித்யா கதிர், சித்ரா லட்சுமணன், தலைவாசல் விஜய், வையாபுரி, வடிவுக்கரசி, விஜி சந்திரசேகர், ஸ்ரீஜா ரவி, இந்திரஜா ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். சாண்டி கேமியோ கதாப்பாத்திரத்தில் தோன்றியுள்ளார். இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில், வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.