‘சிஸ்டம்’ திரைப்படம், அதிகாரம் மற்றும் நீதிக்கிடையிலான மோதலை மையமாகக் கொண்ட நீதிமன்றத் த்ரில்லர் திரைப்படம். செல்வாக்கும் சலுகைகளும் ஆளும் உலகில் உண்மையை எதிர்கொள்வதன் மூலம் நீதி எவ்வாறு கிடைக்கிறது. என்பதை வெளிப்படுத்துகிறது.
‘சிஸ்டம்’ திரைப்படத்தை அஸ்வினி ஐயர் திவாரி இயக்குகிறார்.பம்மி பவேஜா, ஹர்மன் பவேஜா மற்றும் ஸ்மிதா பாலிகா ஆகியோர் Baweja Studios நிறுவனத்தின் கீழ் தயாரித்துள்ளனர். ஹர்மன் பவேஜா, அருண் சுகுமார், அஷ்வினி ஐயர் திவாரி, தஸ்னீம் லோகண்ட்வாலா மற்றும் அக்ஷத் கில்தியல் ஆகியோர் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர்.
சோனாக்ஷி சின்ஹா, ஜோதிகா மற்றும் அஷுதோஷ் கோவாரிகரின் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில், ப்ரீத்தி அகர்வால், ஆதிநாத் கோத்தாரே, ஆஷ்ரியா மிஷ்ரா, கவுரவ் பாண்டே மற்றும் சயந்தீப் குப்தா உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
‘’சிஸ்டம்” திரைப்படம் மே 22 முதல் இந்தியா உட்பட உலகம் முழுவதும் 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் ப்ரைம் வீடியோவில் பிரத்யேகமாக வெளியாகிறது.
இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் பொழுதுபோக்கு தளமான ப்ரைம் வீடியோ, தனது அடுத்த ப்ரைம் ஒரிஜினல் திரைப்படமான “சிஸ்டம்” திரைப்படத்தின் உலகளாவிய வெளியீட்டு தேதியை மே 22 என இன்று அறிவித்துள்ளது. இயக்குநர் அஸ்வினி ஐயர் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை, பம்மி பவேஜா, ஹர்மன் பவேஜா மற்றும் ஸ்மிதா பாலிகா ஆகியோர் Baweja Studios நிறுவனத்தின் கீழ் தயாரித்துள்ளனர். திருப்பங்கள் நிறைந்த நீதிமன்றத் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படம், அதிகாரம் மற்றும் நீதிக்கிடையிலான மோதலை மையமாகக் கொண்டு நகர்கிறது. ஹர்மன் பவேஜா, அருண் சுகுமார், அஷ்வினி ஐயர் திவாரி, தஸ்னீம் லோகண்ட்வாலா மற்றும் அக்ஷத் கில்தியல் ஆகியோர் இணைந்து எழுதியுள்ள “சிஸ்டம்” திரைப்படத்தில் சோனாக்ஷி சின்ஹா, ஜோதிகா மற்றும் அஷுதோஷ் கோவாரிகர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும்ப்ரீத்தி அகர்வால், ஆதிநாத் கோத்தாரே, ஆஷ்ரியா மிஷ்ரா, கவுரவ் பாண்டே மற்றும் சயந்தீப் குப்தா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் மே 22 முதல் இந்தியா உட்பட உலகம் முழுவதும் 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில், இந்தி மொழியில் பிரத்யேகமாக ப்ரைம் வீடியொவில் வெளியாகிறது.
‘’சிஸ்டம்” திரைப்படம், அதிகாரமும் செல்வாக்கும் நிறைந்த உலகில் நீதி மற்றும் உண்மைக்காக போராடும் இரு பெண்களின் கதையை பேசும் அதிரடி நீதிமன்றத் த்ரில்லர். சோனாக்ஷி சின்ஹா நடித்துள்ள கதாபாத்திரமான நேஹா ராஜ்வன்ஷ் என்ற பொது வழக்கறிஞரும், ஜோதிகா நடித்துள்ள கதாபாத்திரமான எளிய பின்னணியைச் சேர்ந்த நீதிமன்ற ஸ்டெனோகிராபரான சரிகா ராவத் என்பவரும் எதிர்பாராத வகையில் ஒன்றிணைகிறார்கள். சமூக நிலைமையில் முற்றிலும் வேறுபட்டவர்கள் என்றாலும், உண்மையை வெளிக்கொணரவும் நீதியை நிலைநாட்டவும் அவர்கள் சக்திவாய்ந்த அமைப்புகளுக்கு எதிராக போராடுகிறார்கள். என்பதே சிஸ்டம்.