பாலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் மற்றும் தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில், ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ள பான்-இந்திய ஆக்ஷன் என்டர்டெய்னர் திரைப்படம் ‘மான்ஸ்டர்’ (Monster). இத்திரைப்படத்தை வாரிசு, தோழா போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் வம்சி பைடிபள்ளி (Vamshi Paidipally) இயக்கி வருகிறார். நாளுக்கு நாள் பிரம்மாண்டமாக வளர்ந்து வரும் இத்திரைப்படத்தின் புதிய நட்சத்திரக் கூட்டணி மற்றும் வெளிநாட்டுப் படப்பிடிப்பு குறித்த தகவல்கள் தற்பொழுது வெளியாகி, இணையம் முழுவதும் பரவி வருகிறது.
இத்திரைப்படத்தில் நடிகர் சல்மான் கான் இதுவரை ரசிகர்கள் பார்த்திராத முற்றிலும் ஒரு புதிய மிரட்டலான ஆக்ஷன் அவதாரத்தில் (Action Avatar) தோன்றுகிறார். அவருக்கு இணையாக நடிகை நயன்தாராவும் வெறும் நாயகியாக மட்டுமன்றி, அசாத்திய சண்டைக் காட்சிகளில் அதிரடியாக நடிக்கும் மிக முக்கியமான ஆக்ஷன் கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார். இப்படத்தின் சண்டைக் காட்சிகளும் மேக்கிங் ஸ்கேலும் (Scale) சல்மான் கானை முற்றிலும் ஒரு புதிய கோணத்தில் திரையில் பிரதிபலிக்கும் வகையில் மிகவும் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டு வருகின்றன. தற்பொழுது உருவாக்கப்பட்டு வரும் இந்த புதிய ஆக்ஷன் அம்சங்கள் மற்றும் திரைக்கதை வந்துள்ள விதம் குறித்து நடிகர் சல்மான் கான் மகிழ்ச்சியில் உள்ளார்.
மான்ஸ்டர்’ திரைப்படத்தில், இந்தியாவின் அசாத்திய திறமைமிகு குணச்சித்திர நடிகர்களான ரோனித் ராய் (Ronit Roy) மற்றும் மூத்த நடிகை சீமா பிஸ்வாஸ் (Seema Biswas) ஆகிய இருவர் தற்பொழுது ‘மிக முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். மேலும் தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திரம் அரவிந்த்சாமி, பாலிவுட் ஜாம்பவான் ஜாக்கி ஷெராஃப், அபிமன்யு சிங் மற்றும் முகுல் தேவ் உள்ளிட்ட இந்தியாவின் அத்தனை மொழிகளின் முன்னணி மாஸ் நடிகர்களும் தற்பொழுது அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளனர்.
ரோனித் ராய் இதில் நேர்மறையான, அதே சமயம் ஒரு மாஸான மற்றும் பிரம்மாண்டமான (Larger-than-life) கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதையின் ஓட்டத்திற்கு இவரது கதாபாத்திரம் மிக முக்கியமான திருப்புமுனையாக அமையும் எனத் தெரிகிறது. மறுபுறம், நடிகை சீமா பிஸ்வாஸின் கதாபாத்திரம் குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை.
மான்ஸ்டர்’ திரைப்படத்தின் அடுத்தகட்டப் படப்பிடிப்பு தற்பொழுது மும்பையில் உள்ள பிரம்மாண்ட ஸ்டுடியோவில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மும்பை ஷெட்யூலை தொடர்ந்து, வரும் அக்டோபர் மாதத்தில் ஒரு சில முக்கியக் காட்சிகளைப் படம்பிடிப்பதற்காக வெளிநாடுகளில் (Overseas Schedule) படப்பிடிப்பை நடத்தப் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
மான்ஸ்டர்’ திரைப்படத்தை திட்டமிட்டபடி வரும் 2027 ஆம் ஆண்டு ரமலான் பண்டிகை (Eid 2027) அன்று உலகளாவிய ரீதியில் திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமாக வெளியிடப் படத்தயாரிப்பாளர்கள் திட்டமிட்டு வருகின்றனர்.