Utharavu Maharaja – Movie review
‘ஜேசன் ஸ்டுடியோ’ சார்பில் நடிகர் உதயா தயாரித்து நடித்துள்ள படம், ‘உத்தரவு மகாராஜா’. நகைச்சுவை கலந்த சைக்கோ த்ரில்லராக உருவாக்கியிருக்கிறாராம் இந்தப்படத்தை இயக்கிய ஆஸிப் குரைஷி.
வித்தியாசமான மூன்று தோற்றங்களில் உதயா நடித்திருக்க, பிரபு கதையின் முக்கிய பாத்திரமாக நடித்துள்ளார்.
சிறுவயதில் Dissociative identity disorder நோயினால் பாதிக்கப்படும் உதயா அதை தனக்கு சாதகமாக்கிக்கொண்டு கோடி, கோடியாக கொள்ளையடிக்கிறார். பணத்திற்காக அவர் செய்யும் ஒரு கொலையினால் பிரபு பெரிதும் பாதிக்கப்படுகிறார்.
இதனால் வித்தியாசமான முறையில் உதயாவை பழிவாங்குகிறார் பிரபு. போலீஸூக்கு இது தெரியவர, உதயாவை அவர்கள் காப்பாற்றினார்களா? என்பது தான் க்ளைமாக்ஸ்!
நடிப்பில் ஆர்வமிக்க உதயா இந்தப்படத்திற்காக கடுமையாக உழைத்திருந்தாலும் வலுவற்ற காட்சியமைப்பு, சுவாரஷ்யமில்லாத திரைக்கதையினால் எல்லாமே வீணாகிறது.
கோவை சரளா, ஸ்ரீமன், மன்சூர் அலிகான், மனோ பாலா, அஜய் ரத்னம், குட்டி பத்மினி என பலர் நடித்திருந்தாலும் டாக்டர்களாக வரும் பிரபு, தயாரிப்பாளர் கோ.தனஞ்செயன், இருவரும் கவனம் ஈர்க்கின்றனர்.
‘உத்தரவு மகாராஜா’ படத்தை இயக்கியுள்ள ஆஸிப் குரைஷி பெங்காலி படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவராம்!
நகைச்சுவையும் இல்லை! த்ரில்லரும் இல்லை!