யோகிபாபு முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் அவரது அடுத்த திரைப்படம் “கூர்கா. இந்த படம் வரும் ஜூலை 12 ஆம் தேதி இப்படத்தின் டிரைலர் வெளியாகி பெரும் வரப்வேற்பை பெற்றுள்ளதால் படத்தை இயக்கிய சாம் ஆண்டன் உற்சாகத்தில் இருக்கிறார். இது குறித்து அவர் கூறியபோது..
“நிச்சயம் இது ஒரு ஸ்பூஃப் படம் அல்ல. ஆனால் ஒரு சில ஸ்பூஃப் விஷயங்கள் படத்தில் உள்ளன, படத்தின் முக்கிய மையக்கரு ஒரு உணர்ச்சிபூர்வமான பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது.
கூர்கா படத்தின் ஆரம்பம் “100” படத்தின் எடிட்டிங்கின் போது உருவானது. ஒரு நாள் ரூபனும் நானும் நகைச்சுவை, திரில்லர் படங்களைப் பற்றி விவாதிக்க ஆரம்பித்தோம். அப்போது ஒரு கரு உருவானது அது குறித்து யோகி பாபுவிடம் விவரித்தோம்ளது அவருக்கு பிடித்துப்போக அவர் இந்த படத்தின் ஒரு பகுதியாக இருக்க ஒப்புக்கொண்டார். பின்னர் நாங்கள் ஸ்கிரிப்ட்டில் முழுமூச்சில் வேலை செய்யத் தொடங்கினோம்” கூர்கா உருவானது.
இந்தப்படத்தில் ஒரு அழகான லாப்ரடார் வகை நாயான அண்டர்டேக்கரின் பங்கு முக்கியமானதாகும்.. அது இந்த படத்தின் இன்னொரு ஈர்ப்பாக இருக்கப் போகிறது. ஒரு சாதாரண கூர்கா மற்றும் ஒரு சோம்பேறி என முத்திரை குத்தப்பட்ட லாப்ரடார் நாய் பற்றியது. தீவிரவாதிகள் ஒரு ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் உள்ளே புகுந்து தங்கள் கட்டு பாட்டிற்கு கொண்டு வருகிறார்கள். அந்த யோகிபாபுவும், அண்டர்டேக்கரும் ஒரே இரவில் இருவரும் எப்படி ஹீரோக்களாக மாறுகிறார்கள் என்பது தான் கலகலப்பான கூர்காவின் கதை” என்கிறார் இயக்குனர்.
4 மங்கீஸ் ஸ்டுடியோ தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு பாடலுக்கு (போயா) பாடல் எழுதி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. ராஜ் ஆர்யன் இசையமைக்க, ரூபன் படத்தொகுப்பை கையாள, கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.