விஜய், அஜித்துக்கு இல்லாத தைரியம் சூர்யாவுக்கு இருக்கு? – சீமான்

ஒவ்வொரு வருடமும் உயர் கல்வியில் சாதனை படித்த வசதியற்ற மாணவ, மாணவிகளுக்கு உதவும் வகையில் பல பரிசுகளையும், நல திட்ட உதவிகளையும் ஶ்ரீ. சிவக்குமார் கல்வி அறக்கட்டளை மூலம் சிவகுமார், சூரியா, கார்த்தி ஆகியோர் செய்து வருகின்றர்.

சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 40வது ஆண்டு விழா கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய சூர்யா தற்போது மூன்று வயதிலேயே 3 மொழிகள் திணிக்கப்படுகிறது. முதல் தலைமுறை மாணவர்கள் இதனை சமாளிப்பது கடினமான விஷயம். இது குறித்து எல்லோரும் அமைதியாக இருக்கக் கூடாது. அப்படி அமைதியாக இருந்தால் இது நிச்சயம் திணிக்கப்படும். எனவே புதிய கல்வி கொள்கை மீதான ஆலோசனைகளை மாற்றங்களை ஆசிரியர், பெற்றோர், கல்வியாளர்கள், மாணவர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து உரக்கச் சொல்ல வேண்டும். எனவும், அரசாங்க பள்ளிகள் மூடப்படுவது குறித்தும் கவலை தெரிவித்தார்.

சூர்யாவின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவரது கருத்தை பா.ஜ.கவை சேர்ந்த எச் ராஜா, தமிழிசை, தமிழக அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ஜெயக்குமார் ஆகியோர் கண்டித்தனர்.

இந்நிலையில் சூர்யாவின் பேச்சுகுறித்து கருத்து தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்

புதிய கல்விக் கொள்கை குறித்து சூர்யா பேசியதில் அரசியல் பார்க்கக் கூடாது. இது தமிழக மக்களின் அடிப்படை உரிமையாகும்.. சினிமா துறை சார்ந்த பெரிய நடிகர்கள் ( ரஜினி, விஜய், அஜித் ) எல்லாரும் பயந்து கொண்டு இருக்கும் போது சூர்யா தன் மனதில் பட்டதை தைரியமாக கூறியுள்ளார். இதை வரவேற்க வேண்டும்.

அனைவருக்கும் சமமான கல்வி என்பது மானுட உரிமை. அதை நியாயமாக கொடுக்க வேண்டியது அரசின் கடமையாகும். என கருத்து தெரிவித்துள்ளார் சீமான்.