வருகின்ற தமிழக (2021) சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் படி நடிகர் ரஜினிகாந்த் தனது மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இன்று ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடிகர் ரஜினிகாந்த் தலைமையில் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திராதிருமண மண்டபத்தில் நடந்தது. அதில் தமிழகம்முழுவதும் உள்ள 37 மாவட்டசெயலாளர்கள் கலந்துகொண்டனர். இதில் முக்கிய நிர்வாகிகள் தவிர வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை.
இந்தக்கூட்டத்தில் பேசிய ரஜினிகாந்த்,’சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி வைத்து கொள்ளலாம், யாருடன் கூட்டணி வைக்கக் கூடாது. கமலுடன் கூட்டணி அமைத்தால் அது நமக்கு சாதகமா,பாதகமா? உங்க தொகுதியில் எந்த கட்சிக்கு செல்வாக்கு எந்த சாதிக்கார்ர்கள் அதிகம் உள்ளனர்.உங்க தொகுதியில் மக்கள் மன்ற உறுப்பினர்கள் எவ்வளவு பேரை இது வரை சேர்த்து உள்ளீர்கள் .நம் கட்சி தனித்து போட்டியிட்டால் ஆட்சியை பிடிக்குமளவுக்கு வெற்றி பெற முடியுமா?என உங்கள் மனதில் பட்ட கருத்துக்களை தைரியமாக கூறலாம்.என பேசினார்.
இதையடுத்து மாவட்ட செயலாளர்கள் ஒவ்வொருவரின் பெயர் மைக்கில் அறிவிக்கப்பட ,ஒவ்வொருவரும் ரஜினிகாந்த் முன் நின்று தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.சுமார் 1.30 மணிநேரம் நடந்த இந்த ஆலோசனையில் மாவட்டம் வாரியாக மாநாடு நடத்துவது பற்றியும்,கட்சிக்கொடி பெயர் குறித்தும் விவாதிக்கப்பட்டது
.கூட்டத்தின் முடிவில், சட்டசபை தேர்தலை சந்திக்க இப்போதே தயாராக இருக்கும்படி ரஜினி, மாவட்டசெயலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இக் கூட்டத்தை தொடர்ந்து மாவட்ட வாரியாக கட்சி உறுப்பினர்களையம் விரைவில் சந்திக்க ரஜினிகாந்த் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.