சுரபி ஜோதிமுருகன் தயாரித்து ஆர் கே சுரேஷ், ராம்கி, சுபிக்ஷா, நமோ நாராயணா ஆகியோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம், ‘வேட்டை நாய்’.
ராம்கி, அடியாட்களை மூலதனமாக வைத்துக்கொண்டு கட்டப் பஞ்சாயத்து செய்து வரும், கூலிப்படைத் தலைவன். அவரிடம் இருக்கும் அடியாட்களில் ஆர்.கே.சுரேஷ், முதலிடத்தில் இருக்கிறார். அவருடைய இடத்தைப்பிடிக்க அவர்களுக்குள்ளேயே போட்டியும் நடக்கிறது.
இந்த சூழ்நிலையில் ஆர் கே சுரேஷுக்கு நாயகி சுபிக்ஷாவை பார்த்தவுடன் காதல் தொற்றிக்கொள்கிறது. சுபிக்ஷாவிற்கோ அவரை சுத்தமாக பிடிக்கவில்லை. இருந்தாலும் கட்டாய திருமணம் நடக்கிறது.
திருமணத்திற்கு பின் திருந்தி வாழும் ஆர் கே சுரேஷைக் கொல்ல எதிரிகள் திட்டமிடுகிறார்கள். அதன் பிறகு என்ன நடந்தது என்பதே, படத்தின் கதை.
திறமையான நல்ல இயக்குனர் கிடைத்தால் மட்டுமே ஆர்.கே.சுரேஷ் பரிமளிப்பார்.
பள்ளி மாணவியாகவும், திருமண ஆன பெண்ணாகவும் சுபிக்ஷா பெரிய குறைகள் இல்லாமல் நடித்திருக்கிறார்.
ராம்கியின் கதாபாத்திரம் செயற்கையாக இருப்பதால் அவரால் படத்திற்கு எந்த பலமும் இல்லை.
ஈஸ்வரனின் ஒளிப்பதிவும், கணேஷ் சந்திரசேகரனின் இசையும் ஓகே.
‘வேட்டைநாய்’ படத்தால் அதன் தயாரிப்பாளருக்கும் பிரயோஜனமில்லை. அதை இயக்கிய இயக்குனர் ஜெய்சங்கருக்கும் பிரயோஜனமில்லை.