‘பாண்டவர் பூமி’ படத்தில் இடம் பெற்ற ‘அவரவர் வாழ்க்கையில் ஆயிரமாயிரம்’ பாடல்கள் மூலம் திரையுலகிற்கு பிரபலமானவர் கவிஞர் சினேகன். ‘சாமி’ படத்தில் இடம்பெற்ற ‘கல்யாணந்தான் கட்டிகிட்டு’ பாடல் மூலம் வரவேற்புக்களையும், கண்டனங்களையும் ஒரு சேர பெற்ற இவர் சுமார் 2500 பாடல்களை எழுதியுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது அவருடைய கட்டிப்பிடி வைத்தியம் ரசிகர்களிடையே பிரபலமானது. அந்த நிகழ்ச்சி முடிவடைந்தவுடன் கமலின் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்துகொண்டார்.
சினேகனுக்கும் ‘கல்யாண வீடு’ டிவி சீரியலில் நடித்த நடிகை கன்னிகாவிற்கும் சென்னையில் வரும் 29-07- 2021 வியாழன் அன்று ‘மக்கள் நீதி மய்யத் தலைவர், டாக்டர் கமல்ஹாசன் தலைமையில் திருமணம் நடைபெற இருக்கிறது.