உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள தேமுதிக தொண்டர்கள் தயாராக இருக்க வேண்டும்.
நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலுக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை சேர்ந்த அனைவரும் தயாராக இருக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தல் தேதி இதுவரை அறிவிக்கப்படாத நிலையில், தேர்தல் எப்போது நடைபெற்றாலும் அதனை எதிர்கொள்ள தொண்டர்கள் ஆயத்தமாக இருக்க வேண்டும்.
அனைத்து இடங்களிலும் தொண்டர்கள் போட்டியிட தயாராக இருக்க வேண்டும். மேலும் எந்த குழப்பத்திற்கும் இடமளிக்க கூடாது. வரப்போகும் உள்ளாட்சி தேர்தல் தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு முக்கியமான தேர்தலாக அமையும்.
உள்ளாட்சி தேர்தலில் நமக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும் அனைத்து இடங்களிலும் எவ்வித குழப்பத்திற்கும் இடமளிக்காமல் வேட்பாளர்கள் அனைவரும் தயாராக இருக்க வேண்டும். தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே தேர்தலுக்கான பணிகளில் கழக தொண்டர்கள் தீவிரமாக ஈடுபட வேண்டும்.
உள்ளாட்சி தேர்தல் என்பது நமது கட்சிக்கு மிக முக்கியமான தேர்தல் என்பதால், சரியான முறையில் தேர்தலை எதிர்கொள்ள கழக தொண்டர்கள் அனைவரும் ஆயத்தமாக இருக்க வேண்டும்.
இவ்வாறு தேமுதிக தலைவர் விஜயகாந்த் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.