56வது சர்வதேச கோவா திரைப்பட விழாவில் WAVES Film Bazaar பிரிவின் கீழ் “சிறந்த திரைப்பட அடையாள விருதை ஆக்காட்டி திரைப்படம் பெற்றுள்ளது.” படத்தின் இயக்குநர் ஜெய் லட்சுமி, இணைத் தயாரிப்பாளர் சுனில் குமார், ஒலி வடிவமைப்பாளர் ஹரி பிரசாத், மற்றும் காஸ்டிங் இயக்குநர் சுகுமார் சண்முகம் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு விருதை பெற்றனர்.
தென் தமிழக கிராமப்புறங்களில் நிலவும் தாய்மாமன் சீர் வரிசை முறையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம், சமூதாய மரபுகள் உருவாக்கும் நெருக்கடிகளையும், அதனால் மனித மனத்தில் எழும் சிக்கல்களையும் மென்மையான உணர்வுகளையும் பதிவு செய்கிறது.
ஆக்காட்டி முதல் படமான இயக்குநர் ஜெய் லட்சுமி, நாளைய இயக்குனர் – சீசன் 6 போட்டியில் பங்கேற்று, அதில் அடாப்ட் செய்யப்பட்ட குறும்பட திரைக்கதைக்கான இறுதிப்போட்டி விருதைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கு தொடர்ச்சி மலையில் நடிப்பின் மூலம் கவனம் பெற்ற ஆண்டனி மற்றும் முக்கிய கதாப்பாத்திரத்தில் முல்லையரசி , சிறுவனாக சுபாஷ் ஆகியோர் கதையின் மாந்தர்களாக நடித்து உள்ளனர். படத்தின் தொழில்நுட்பக் குழுவில் S E எசக்கி ராஜா ஒளிப்பதிவாளர், ராம் குமார் எடிட்டர், தீபன் சக்ரவர்த்தி இசையமைப்பாளர், ஆர்ட் டைரக்டர் மனோஜ் குமார்,நேரடி ஒலி வடிவமைப்பாளர் பாலா ஜீவ ரத்தினம்,சுகுமார் சண்முகம் காஸ்டிங் இயக்குநராகவும், சேகர் முருகன் CG கலை இயக்குநராகவும், டைட்டீல் ஸ்டோரிபோர்ட சந்திரன், டிரெய்லர் &புரமோஷன் எடிட்டிங் பிரேம் B,கலரிஸ்ட் ரத்தன் மற்றும் படத்தின் ஒலி வடிவமைப்பை பெப்பிள்ஸ் ஸ்டூடியோ ஹரி பிரசாத் M.A மேற்கொண்டுள்ளார்.
ஆக்காட்டி திரைப்படத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக கவிஞர் கார்த்திக் நேத்தா இரு பாடல்களை எழுதியுள்ளார். மேலும் பல சர்வதேச திரைப்பட விழாவுக்கு அனுப்ப பட்டிருக்கும் ஆக்காட்டி திரைப்படம், விரைவில் நற்செய்தியுடன் முதல் பார்வையை வெளியிடும் என தயாரிப்பு குழு தெரிவித்துள்ளது.