‘ஆலன்’ – விமர்சனம்!

‘3 எஸ் பிக்சர்ஸ்’ சார்பில்,  சிவா.ஆர்.  தயாரித்து இயக்கியிருக்கும் படம், ஆலன். இதில் வெற்றி, ஜனனி தாமஸ், அனுசித்தாரா, விவேக் பிரசன்னா, ‘அருவி’ மதன், ஹரிஷ் பெராடி, டிட்டோ வில்சன், ஸ்ரீதேவா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு – விந்தன் ஸ்டாலின், இசை – மனோஜ் கிருஷ்ணா.

வெற்றி தனது சிறு வயதில் கதை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். அவரது வாழ்க்கையில் நடந்த சில சூழ்நிலை காரணமாக காசிக்கு செல்கிறார். அங்கு இருக்கும் சாமியார்களுடன் சேர்ந்து பெரியவனாகிறார். இந்நிலையில் மடாதிபதியான ஹரீஷ் பெராடி வெற்றியின் எழுத்துத்திறமையை அறிந்து, வெற்றியை தொடர்ந்து எழுதுமாறு அறிவுறுத்துகிறார்.

வெற்றி காசியிலிருந்து சென்னை வரும் வழியில் ஜனனி தாமஸை சந்திக்கிறார். இருவரும் சென்னை வருகின்றனர். வெற்றியின் எழுத்திற்கு உற்சாகம் கொடுக்கிறார், ஜனனி தாமஸ். இந்நிலையில், சிலரால் கற்பழித்து கொல்லப்படுகிறார், ஜனனி தாமஸ். விரக்தியடையும் வெற்றி, ‘ஆலன்’ என்ற கதையை எழுதுகிறார். அந்தக்கதை மிகப்பெரிய வரவேற்பினை பெறுகிறது. அதன் பிறகு அனு சித்தாரவை சந்திக்கிறார், காதல்கொள்கிறார்.

படத்தின் பலவீனமான திரைக்கதை, ஒப்பனை இரண்டும் படம் பார்ப்பவர்களை இம்சிக்கிறது. அதிலும் வெற்றியின் ஒப்ப்னை கொடூரம். வித்தியாசமான படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வந்த வெற்றிக்கு இந்தப்படம் அய்யோ! படத்தின் ஆறுதலான விஷயங்களாக ஜனனி தாமஸூம், அனு சித்தாராவும்.

விந்தன் ஸ்டாலினின் ஒளிப்பதிவில் காசி, ரிஷிகேஷ், பாண்டிச்சேரி, ராமேஸ்வரம் ஆகிய இடங்கள் அழகாக தெரிகின்றன.

பழி தீப்பது பெரிதல்ல! மன்னிப்பதே மனித மாண்பு. என்று போதிக்கிறார், இயக்குநர் சிவா ஆர்.

மற்றபடி இந்த ‘ஆலன்’ — ஐ கொண்டாடுவதற்கு எதுவும் இல்லை!