நடிகர் ஆரவ் ஓ காதல் கண்மணி , சைத்தான், மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ், கலகத் தலைவன், மாருதி நகர் போலிஸ் ஸ்டேசன், அஜித்துக்கு வில்லனாக ‘விடாமுயற்சி’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர். விஜய் தொலைக்காட்சியில் நடந்து வரும் ‘பிக் பாஸ்’ 2017 ஆண்டு நடந்த போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற்றவர். இவர், “AARAV STUDIOS” என்ற பெயரில், திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
AARAV STUDIOS நிறுவனத்தின் மூலமாக வித்தியாசமான கதை அம்சங்களை கொண்ட திரைப்படங்களை தயாரித்தும், அவற்றில் சில படங்களில் நடிக்கவும் முடிவுசெய்துள்ளார். நல்ல கதையுடன் காத்திருக்கும் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க முடிவு செய்துள்ளார், நடிகர் ஆரவ்.