‘ஆக்‌ஷன்’ படம் பார்க்கலாமா? – விமர்சனம்

‘ட்ரைடன்ட் ஆர்ட்ஸ்’ ஆர்.ரவீந்திரன் தயாரிப்பில் விஷால், தமன்னா, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, ஆகன்ஷா பூரி, கபிர் துஹான் சிங் நடித்துள்ள படம் ‘ஆக்‌ஷன்’.

சுந்தர்.சி இயக்கியிருக்கும் இந்தப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார், ஹிப்ஹாப் தமிழா ஆதி.

‘ஆக்‌ஷன்’ ன்ற டைட்டில்ல வெளியாகியிருக்க இந்தப்படம் ஆக்‌ஷன் பிரியர்களுக்கான படமா? பார்க்கலாம்.

பழ. கருப்பையா நேர்மையான முதலமைச்சர். அவருடைய கட்சி மேடையில் பிரதமர் வேட்பாளர் வெடி வைத்து கொல்லப்படுகிறார்.

அதன் தொடர்ச்சியாக விஷாலின் அண்ணன் ராம்கியும், காதலியும் கொல்லப்படுகிறார்கள்.

மிலிட்டரி கர்னலான விஷால், பாகிஸ்தானிலிருக்கும் தீவிரவாதி கபீர் துஹான் சிங் தான் இதற்கு காரணம் என கண்டுபிடிக்கிறார்.

விஷால் பாகிஸ்தான் சென்றாரா? கபீர் துஹான் சிங் கை என்ன செய்தார் என்பதே ‘ஆக்‌ஷன்’ படத்தின் திரைக்கதை.

‘அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது’ ன்ற மாதிரி கதைக்களம் இந்தியாவுல தொடங்கி லண்டன், துருக்கி, இஸ்தான்புல், பாகிஸ்தான் என பயணித்தாலும் திரைக்கதை சொதப்பல்.

விஷால் படம் முழுவதும் ஓடுகிறார், பறக்கிறார். அதை த்தவிர அவருக்கு வேற வேலையில்லை.

படத்தின் நாயகி ஐஸ்வர்யா லக்‌ஷ்மி படத்தின் மிகப்பெரிய மைனஸ். ஒரே ஒரு பாடலுக்கு வந்து கிளுகிளுப்பூட்டுகிறார். வில்லி ஆகன்ஷா புரி.

விஷாலுடன் சேர்ந்து தமன்னா ஆக்‌ஷன்!? காட்சிகளில் வந்து போகிறார்.

காமெடின்ற பேர்ல கொலையா கொன்னு எடுக்குறாரு ‘டெம்ப்பிள் மங்கி’ ஷா ரா. (Shiva Saravanan)

ஒளிப்பதிவு செய்திருப்பவர் (Dudley) டட்லி. சம்மர் கூலர்ஸ் போட்டு படம் பார்ப்பது போல் இருக்கிறது அவருடைய ஒளிப்பதிவு.

ஹிப்ஹாப் ஆதியின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் சுத்தமாக எடுபடவில்லை.

எல்லாத்தையும் விட படத்தோட மிகப்பெரிய கோமாளித்தனமான கூத்து எதுன்னா? பாகிஸ்தான்ல.. விஷால் சந்து பொந்தெல்லாம் சுத்தி, கபிர் துஹான் சிங்கை ஃப்ளைட்ல கடத்துற சீன் தான்!

காமெடி, நச்சுன்னு நாலு பாட்டு. ஒரு சின்ன ஆக்‌ஷன் ட்ராமா. கண்ணுக்கு குளுமையா ஹீரோயின்ஸ் கிளுகிளுப்பு. இப்படித் தான் சுந்தர்.சி படம் இருக்கும்ன்னு நம்பி வந்தவங்களுக்கு இந்தப்படம் பெரிய ஏமாற்றம்.

மொத்தத்துல விஷால் – சுந்தர் சி காம்பினேஷன் ல ஒரு ‘அட்டு’ படம்