லியோ படத்தில் நடிகர் நாசரின் தம்பி ஜவஹர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்!

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவரும், பிரபல நடிகருமான நாசரின் தம்பி ஜவஹர். இவர் இதயம், கிழக்கு வாசல், சிங்காரவேலன் போன்ற படங்களில் உதவி ஒளி பதிவாளராக பணியாற்றியுள்ளார். அதோடு, ஜி வி 2 , பனிவிழும் மலர்வனம் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது, விஜய் நடித்து வரும் லியோ படத்தில், முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தனக்கு கிடைத்த வாய்ப்பையும் லியோ படத்தின் இயக்குநர் லோகேஷ் கண்கராஜ் குறித்து அவர் கூறியதாவது..

இளைய தளபதி விஜய் படத்தில் நடித்திருப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. எந்த மாதிரியான கதாபாத்திரம், எனக்கான காட்சிகள் குறித்து எதுவும் தெரிவிக்க இயலாது. லியோ படத்தில் நான் சம்பந்தப்பட்ட காட்சிகள் 15 நாட்கள் படமாக்கப்பட்டது. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எந்தவிதமான வித்தியாசமான கதாபாத்திரங்கள் என்றாலும் நடிக்க தயாராக இருக்கிறேன். லியோ படத்தில் நடிக்க எனக்கு கிடைத்த வாய்ப்பு, வாழ் நாளில் மறக்க முடியாத ஒன்று என்றார்.