சிறந்த மனிதநேய விருதை பெற்றார், நடிகர் சௌந்தரராஜா!

நடிகர் சௌந்தரராஜா விற்கு இந்த ஆண்டிற்கான சிறந்த மனிதநேய விருது 2022 மலேசியா கோலாலம்பூரில் வழங்கப்பட்டது.

Take Care International Foundation என்ற அமைப்பு மக்களுக்காக சேவை செய்யும் சிறந்த மனிதர்களை தேர்ந்தெடுத்து ஒவ்வொரு ஆண்டும் “Pride of Humanity” விருது வழங்கி கௌரவிக்கிறது.

தமிழகம் முழுவதும் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மரசெடிகளை நட்டு, இயற்கை மற்றும் சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தையும் மக்களிடம் எடுத்துக்கூறி பொது வாழ்க்கையிலும் ஈடு படுத்தி கொள்ளும் நடிகர் சௌந்தரராஜாவிற்கு இந்த ஆண்டுக்கான சிறந்த மனிதர் என்ற விருது மலேஷியா கோலாலம்பூரில் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மலேஷியா செலங்கூர் மன்னர் சலாகுத்தீன் அப்துல் அஜிஸ் ஷா, டத்தோ சசிகலா சுப்ரமணியம் ( Deputy Director of police – Malaysia Royal police ) மற்றும் முன்னாள் குடியரசு தலைவர் APJ அப்துல் கலாம் அவர்களின் பேரன் கலாம் பவுண்டேஷன் சலீம், ஸ்ரீமதி கேசவன், Take Care International foundation நிறுவனர் முகமது இப்ராஹிம் ஆகியோர் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினர்.

நான் செய்வது சேவை அல்ல கடமை என்று கூறிய நடிகர் சௌந்தரராஜா, மாதம் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் இந்த மண்ணுக்காகவும் இந்த மண்ணில் பிறந்த மக்களுக்காவும் உழைப்போம் என்று கேட்டுக்கொண்டு இந்த விருதை விவசாயிகளுக்கும் இயற்கையை நேசிக்கும் அனைவருக்கும் அர்ப்பணிப்பு செய்வதாக கூறினார்.