நடிகர் விஜய் தேவரகொண்டா நடிக்கும் ஆக்சன் டிராமா ‘JGM’!

நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் சரித்திரம் படைக்கும் இயக்குனர் பூரி ஜெகன்நாத் ஆகியோர் இணைந்து, உலகெங்கிலும் உள்ள ரசிகர்களின் காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து, மும்பையில் நடந்த ஒரு உற்சாகமான நிகழ்வில், தங்கள் அடுத்த திரைப்படமான “JGM”  படத்தை இன்று அறிவித்தனர். இந்த பிரம்மாண்டமான ஆக்‌ஷன் டிராமா, பன் மொழி இந்திய பொழுதுபோக்கு திரைப்படம், நடிகர்  விஜய் தேவரகொண்டாவை இதுவரை கண்டிராத  பாத்திரத்தில் காண்பிக்கும், இது அவரது திரைப்பயணத்தில் அடுத்த திருப்புமுனையாக இருக்கும்!

JGM திரைப்படத்தை சார்மி கவுர், வம்ஷி பைடிப்பள்ளி மற்றும் பூரி ஜெகன்நாத் இணைந்து  தயாரிக்கிறார்கள். திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார்  பூரி ஜெகன்நாத். இந்த ஆக்‌ஷன் என்டர்டெய்னர் படம்,  இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. ரசிகர்களை இருக்கை நுனியில் வைத்திருக்கும், மற்றுமொரு அட்டகாசமான பொழுதுபோக்கு விருந்தாக இப்படம் இருக்கும்.

படம் பற்றி இயக்குனர் பூரி ஜெகன்னாத் பகிர்ந்துகொண்டதாவது.., “எங்கள் அடுத்த திரைப்படமான ‘JGM’ பற்றிய அறிவிப்பை வெளியிடுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். விஜய் தேவரகொண்டாவுடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. JGM ஒரு வலுவான கதைகொண்ட, அதிரடி ஆக்‌ஷன் என்டர்டெய்னர்”

படம் குறித்து நடிகர் விஜய் தேவரகொண்டா கூறியதாவது.., “JGM  எனக்கு மிகுந்த உற்சாகத்தை தந்துள்ளது. இப்படம் மிகவும் சவாலான திரைக்கதை கொண்டது. இந்த கதை மிகவும் சிறப்பு வாய்ந்தது, இப்படம் ஒவ்வொரு இந்தியரின் இதயத்தையும்  தொடும்.  இயக்குநர் பூரி ஜெகன்நாத் அவர்களின் கனவுத் திரைப்படத்தில் நான் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமை அடைகிறேன். சார்மி மற்றும் அவரது குழுவுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன். JGM படத்தில் எனது கதாபாத்திரம் இதுவரை நான் செய்திராத புதுமையான பாத்திரம், மேலும் இது பார்வையாளர்களிடம் ஒரு அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன்.

ஸ்ரீகாரா ஸ்டுடியோவின் தயாரிப்பாளர் வம்ஷி பைடிப்பள்ளி கூறுகையில், “இந்த அற்புத திரைப்படமான  JGM படத்தில் விஜய் தேவரகொண்டா, பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த படம் ஒவ்வொரு இந்தியனின் மனசாட்சியையும் தட்டிவிடும் என்று ஸ்ரீகாரா ஸ்டுடியோவில் உள்ள நாங்கள் அனைவரும்  நம்புகிறோம்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 2022  துவங்கி, உலகின் பல இடங்களில் நடைபெறவுள்ளது.

JGM படம்  பூரி கனெக்ட் & ஸ்ரீகாரா ஸ்டுடியோ இணை தயாரிப்பு ஆகும். சார்மி கவுர், ஸ்ரீகாரா ஸ்டுடியோ தயாரிப்பாளர் வம்ஷி பைடிப்பள்ளி, ஸ்ரீகாரா ஸ்டுடியோவின் இயக்குனர் சிங்கராவ் ஆகியோர் இப்படத்தை தயாரிக்கின்றனர். பூரி ஜெகன்நாத் எழுதி இயக்கும் இந்த ஆக்‌ஷன் என்டர்டெய்னர், 3 ஆகஸ்ட் 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.