மஞ்சு மனோஜ் – ப்ரியா பவானி சங்கர் நடிக்கும் “அஹம் பிரம்மாஸ்மி” !

மஞ்சு மனோஜ்  சிறு இடைவேளைக்கு மீண்டும் ரசிகர்களை ஈர்க்க  வருகிறார். “அஹம் பிரம்மாஸ்மி” என தலைப்பிடப்பட்டுள்ள படத்தில் நடிக்கிறார். மஞ்சு மனோஜ், நிர்மலா தேவி  ஆகியோர் சார்பில்  MM Arts நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நடிகை ப்ரியா பவானி சங்கர் மஞ்சு மனோஜ் ஜோடியாக நடிக்கிறார்.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் உருவாகும் “அஹம் பிரம்மாஸ்மி” படத்தை இயக்குநர் ஶ்ரீகாந்த் N ரெட்டி இயக்குகிறார்.  இப்படத்தின் துவக்க விழாவில் மெகா பவர் ஸ்டார் ராம்சரண்  விருந்தினராக கலந்து கொண்டு க்ளாப் அடிக்க,  அந்த காட்சியை பேபி நிர்வாணா இயக்க  படப்பிடிப்பு  துவக்கப்பட்டது.