நடன இயக்குநர், நடிகர், இயக்குனர் என பல துறைகளில் புகழ்பெற்ற ராகவா லாரன்ஸ் ‘காஞ்சனா’ படத்தில் நடித்து இயக்கியிருந்தார். இதில் இடம்பெற்ற முக்கியமான திருநங்கை கேரக்டரில் சரத்குமார் நடித்திருந்தார். இப்படம் மக்களிடையே மிகப்பெரும் வரவேற்பையும் திரு நங்கைகளிடத்தில் மதிப்பையும் பெற்றது.
இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வரும் காஞ்சனா படத்தை ராகவா லாரன்ஸ் இயக்கி வருகிறார். சரத்குமார் நடித்திருந்த திருநங்கை கேரக்டரில் பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் நடிக்கும் இந்தப்படத்திற்கு ‘லக்ஷ்மி பாம்’ என பெயரிடப்பட்டு, வரும் மே மாதம் வெளியாகிறது.
இந்நிலையில் பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் திருநங்கைகளுக்கு வீடு கட்ட உதவும் வகையில் ரூ.1.5 கோடியை லாரன்ஸ் அறக்கட்டளைக்கு வழங்கியுள்ளார்.