‘என்ஜாய் பிலிம்ஸ்’ மற்றும் ‘ஃபிரோ மூவி ஸ்டேஷன்’ ஆகியவை இணைந்து தயாரித்துள்ள படம், ‘அங்கம்மாள்’. இத்திரைப்படத்தினை, ‘ஸ்டோன் பெஞ்ச்’ நிறுவனம் வழங்குகிறது. எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘கோடித்துணி’ என்ற சிறுகதையை மையமாக வைத்து உருவாகி உள்ள இத்திரைப்படத்தில், ‘அங்கம்மாள்’ என்ற முதன்மை கதாபாத்திரத்தில் கீதா கைலாசம் நடித்துள்ளார். அவருடன் சரண், பரணி, முல்லையரசி, தென்றல் ரகுநாதன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். திரைக்கதை எழுதி, இயக்கியிருக்கிறார், விபின் ராதாகிருஷ்ணன்.
ஒளிப்பதிவாளராக அஞ்சோய் சாமுவேல். இசையமைப்பாளராக முகமது மக்பூல் மன்சூர்.
‘அங்கம்மாள்’ திரைப்படம், வரும் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் படம் குறித்து, அதன் இயக்குநர் விபின் ராதாகிருஷ்ணன் கூறியிருப்பதாவது..,
‘சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கு கொண்ட ‘அங்கம்மாள்’, பல விருதுகளை பெற்றதுடன், இளம் பார்வையாளர்களின், பெரும் வரவேற்பினை பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. சமீபத்தில், ‘நியூயார்க்’ இந்திய திரைப்பட விழாவில், சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றுள்ளது. கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கிறது. தான் நினைத்ததை செய்யும், போல்டான கதாபாத்திரம் அங்கம்மாள். அதற்கான நடிகையை தேர்வு செய்யும் போது கீதா கைலாசம் உடனே நினிஅவுக்கு வந்தார். ஏற்கனவே அவர் நடித்த படங்களை பார்த்திருக்கிறேன். முதலில் அவரை அனுகும் போது பயம் இருந்தது. ஏனென்றால், பிளவுஸ் அணியாமல் நடிக்க வேண்டிய கதாபாத்திரம் அது. பிறகு சந்தித்து கதை சொன்னபோது சிறிய தயக்கத்தோடு சம்மதித்தார். அவர் தான் இந்தப்படத்தின் உயிர்நாடி. மிகச்சிறப்பாக நடித்து கொடுத்துள்ளார். அவரது திரை வாழ்க்கையில் ‘அங்கம்மாள்’ ஒரு முக்கியமான படமாக இருக்கும்.’ என்றார்.

அங்கம்மாள் – கீதா கைலாசம் கூறியதாவது..,
‘அங்கம்மாளாக நடிப்பதற்கு, தயக்கத்திற்கு பிறகு தான் சம்மதித்தேன். நான் பிறந்து வளர்ந்தது கிராமம் தான் என்றாலும், அது எனக்கு பெரிய பொறுப்புணர்வு கொடுப்பது போல், அதே சமயத்தில் பயமாகவும் இருந்தது. எனது சுபாவத்திற்கு நேரெதிரான சுபாவம் தான் அங்கம்மாளின் சுபாவம். அந்த கதாபாத்திரம் போல்டாகவும், தான் நினைத்தை செய்யும் கதாபாத்திரமாகவும் இருநத்து எனக்கு சவால் தான்.
அதன் பிறகு இன்னொரு பெரிய சவால், சுருட்டு பிடிப்பது. நடிப்பதற்கு முன்னர் நான் எடுத்த முதல் பயிற்சியை தான். வீட்டிலேயும் பயிற்சி எடுத்தேன். என்னுடைய பிள்ளைகள், ‘பார்த்தும்மா அடிக்ட் ஆயிட போறேன்னு.., கண்டித்தார்கள்.’ நான் புகை முழுவதையும் உள்ளே இழுக்காமல் தான் பயிற்சி எடுத்தேன். அதன் பிறகு டூ வீலர். 20 வயதுகளில் நான் டூ வீலர் ஓட்டியிருக்கிறேன். அதனால் சிறிய சிரமத்துடன் கற்றுக்கொண்டேன். டிவிஎஸ் மொபேட் இப்போது ஓட்டும் போது மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுத்தது. இத்திரைப்படம் தற்போது பல சர்வதேச விழாக்களில், விருதுகள் பெற்று வருவது சந்தோஷத்தை கொடுத்துள்ளது. வரும் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. பார்த்து விட்டு சொல்லுங்கள்.’ என்றார்.
இதுவரை பல படங்களில், தனது தனிப்பட்ட நடிப்பின் மூலம கவனம் பெற்று வரும் கீதா கைலாசம். இந்தப்படத்தின் மூலம் மிகப்பெரிய அடையாளத்தை பெறுவார். என்கிறார்கள் படம் பார்த்தவர்கள். ‘முதல் மரியாதை’ படத்தில் நடித்த வடிவுக்கரசிக்கும், ‘ஜீன்ஸ்’ படத்தில் நடித்த ராதிகாவிற்கும், எப்படி அந்தப்படங்கள் தனித்த அடையாளத்தை பெற்றுத்தந்ததோ, அதே போல் ‘அங்கம்மாள்’ படத்தில் நடித்திருக்கும் கீதா கைலாசத்திற்கும் தனித்த அடையாளம் கிடைக்கும், என்கின்றனர்.