ஏ.பி.ஸ்ரீதர் மிரட்டல்!

Artist AP Shreethar played negative character in jada Movie

ஓவிய உலகில் மிகவும் புகழ்பெற்று விளங்கி வருபவர் ஓவியர் ஏ.பி.ஶ்ரீதர். இவர் கிளிக் ஆர்ட், 3டி ஓவியம், மெழுகு சிலை ஓவியங்கள் மூலம் பல உலக சாதனைகளை படைத்துள்ளார்.

ஏ.பி.ஸ்ரீதர் திரையுலகிலும் தன்னுடைய திறமைகளை அவ்வபோது நிரூபித்து வருபவர். ‘ஆந்திரா மெஸ்’  படத்தில் வில்லனாக நடித்துள்ள இவர்  தற்போது கதிர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ஜடா’ படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார்.

ஏ.பி.ஸ்ரீதர் ‘ஜடா’ படத்தின் இவருடைய அறிமுக காட்சியிலும், மகனுக்காக பழிவாங்கும் காட்சியிலும்  பார்வையிலேயே மிரட்டி இருக்கிறார்.  இவரது மிரட்டலான நடிப்பு ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.

‘ஜடா’ குறித்து ஏ.பி.ஸ்ரீதர் கூறும்போது,

‘அறிமுக இயக்குநர் குமரன் இயக்கியிருக்கும் ஜடா திரைப்படம் தற்போது வெளியாகி இருக்கிறது. இப்படத்தில் நடிக்க என்னை அணுகினார்கள். இப்பொழுது படத்தை பார்த்த அனைவரும் என்னை பாராட்டுகிறார்கள். என்னுடைய நடிப்புக்கு கிடைக்கும் பாராட்டுக்கள் அனைத்தும் படக்குழுவினருக்கே சேரும்.

‘ பொயட் ஸ்டுடியோ’  நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் கதிர் கால்பந்தாட்ட வீரராக நடித்திருக்கிறார்.  தற்போது இப்படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வருவது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது’ என்றார்.