எஸ் டி ஆர் – வெற்றிமாறன் படப்பிடிப்பு, கோவில்பட்டியில் தொடங்கியது!

இயக்குநர் வெற்றிமாறன் இயக்க்கத்தில், சிலம்பரசன் TR நடிப்பில் உருவாகும் ‘அரசன் ‘ திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மதுரைக்கு அருகே உள்ள கோவில்பட்டியில் பூஜையுடன் தொடங்கியது. இத்திரைப்படத்தில் சிலம்பரசன் TR, விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா, கிஷோர் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.

சிலம்பரசன் TR  ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த, இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்த  கோவில்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில்,  தொடர்ந்து இருபது நாட்கள் வரை நடைபெறுகிறது.

அரசன் திரைப்படத்தை, தமிழ்த்திரையுலகின் பிரம்மாண்ட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, ‘வி கிரியேசன்ஸ்’ நிறுவனத்தின் சார்பில் தயாரித்து வருகிறார். ‘வட சென்னை’ திரைப்படத்தின் சில சம்பவங்களின் தொடர்ச்சியாக இத்திரைப்படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.  சிலம்பரசன் TR, விஜய் சேதுபதி இருவரது கதாபாத்திரங்களும் எதிரெதிராக உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், இருவரது ரசிகர்களிடமிருந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.