‘பாம்’, இப்படத்தினை ‘GEMBRIO PICTURES’ சார்பில், சுதா சுகுமார் மற்றும் சுகுமார் பாலகிருஷ்ணன் தயாரித்திருக்க, அர்ஜூன் தாஸ், காளி வெங்கெட், ஷ்வாத்மிகா ராஜசேகர், நாசர் ஆகியோர் நடித்திருக்க, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தினை இயக்கிய, விஷால் வெங்கட் இயக்கியிருக்கிறார்.
வாழ்வின் வினோதங்களைப் பேசும் கமர்ஷியல் எண்டர்டெய்னர் டிரமாவாக உருவாகியுள்ள ’பாம்’. செப்டம்பர் 12 ஆம் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அர்ஜூன் தாஸ், இப்படத்தின் மூலம் தமிழக ரசிகர்களிடையே மேலும் நெருக்கமாகி உள்ளார். ‘கைதி’, ‘மாஸ்டர்’ படங்களின் மூலம் தனது வில்லத்தனத்தில் மிரட்டிய இவர், ‘ரசாவதி’ போன்ற வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களிலும் தன்னை நிலை நிறுத்தியவர்,அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வந்தார்.
அதேபோல் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தில் வில்லனாக நடித்து, ஜாலியான டெரெர் வில்லனாக நடித்து, இளைய தலைமுறையினரிடம் தனி முத்திரை பதித்தார். மற்றவரகள் யூகிக்க தயங்கும் சில கதைகளை தனக்கு சாதகமாக பயன்படுத்தி, தனித்த கதை தேர்வின் மூலம் தொடர்ந்து ரசிகர்களை வியக்க வைத்து வருகிறார், அந்த வரிசையில் தற்போது வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘பாம்’ திரைப்படத்திலும், கிராமத்து இளைஞராக நடித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார். எந்த கதைக்களமானாலும், கதாபாத்திரமானாலும் அதற்குள் தன்னை கச்சிதமாக பொருத்திக்கொள்ளும் நடிகர்களில் அர்ஜூன் தாஸ் இடம்பெற்று விடுகிறார். அவரது வசன உச்சரிப்புக்கும், உடல் மொழிக்கும் தனித்த ரசிகர் பட்டாளம் உண்டு. என்பதை பாம் படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார்.