அருண் விஜய் – அறிவழகன் இணையும் ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லர்!

Arun Vijay teams up with director Arivazhagan

‘செக்கச்சிவந்த வானம்’, ‘தடம்’ என தொடர்ந்து வெற்றிபடங்களில் நடித்து வரும் அருண் விஜய் இயக்குனர் அறிவழகன் இயக்கும் ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தில் நடிக்கிறார். ரெஜினா நாயகியாக நடிக்கவிருக்கிறார்.

‘குற்றம் 23’ படத்திற்கு கிடைத்த வணிக, விமர்சன வெற்றிக்கு பிறகு அருண் விஜய்யும், அறிவழகனும் மீண்டும் இணைந்துள்ளதால், இப்படத்தின் பூஜைக்கு முன்னரே பெரிய எதிர்பார்ப்பினை உருவாக்கியிருக்கிறது.

‘ஆல் இன் ஆல் பிக்சர்ஸ்’ விஜய ராகவேந்திரா இந்த படத்தினை பெரும் பொருட்செலவில் தயாரிக்க திட்டமிட்டுள்ளார்.

முதல் கட்ட படபிடிப்பு சென்னை, ஹைதராபாத், டெல்லி உள்ளிட்ட பல இடங்களில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

ஒருசில நாட்களில்  படப்பிடிப்பு  தொடங்கவுள்ள நிலையில், அடுத்தடுத்த .கட்ட  படப்பிடிப்பிற்கான  இடங்களை தேர்வு செய்து வருகிறார்,  இயக்குநர் அறிவழகன்.

இந்தப்படம்  ஒரு ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லர் கதை  என்பதால், ஆக்‌ஷன் காட்சிகள் அதிகம் பேசப்படும் என்கிறார் இயக்குனர் அறிவழகன் .

2020-ம் ஆண்டு கோடை விடுமுறைக் கொண்டாட்டமாக இந்தப் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது!