‘கிரீன் மேஜிக் எண்டெர்டெயின்மெண்ட்’ சார்பில், ஆர்யன் ஷ்யாம் தயாரித்து கதை, திரைக்கதை எழுதி, நடித்திருக்கும் படம் அந்த நாள். இவர், ‘கலைமாமணி’ திருமதி ஞானம் பாலசுப்பிரமணியம் (பாம்பே ஞானம்) இயக்கிய பிரம்மாண்ட நாயகன் படத்தில் நடித்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.
‘அந்த நாள்’, அமானுஷ்யம் மற்றும் பிளாக் மேஜிக் கொண்ட சைக்கலாஜிக்கல் திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்தப்படத்தை இயக்கி இருக்கிறார், விவி. சதீஷ் கதிர்வேல் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
‘அந்த நாள் படத்தில்’ நடித்துள்ள ஆர்யன் ஷாம் அதுகுறித்து கூறியதாவது…
அந்த நாள் திரைப்படத்தை பல ஆராய்ச்சிகளுக்கு பிறகு எடுத்திருக்கிறோம். இதற்கு முன்னர் இப்படி ஒரு படம் வந்ததில்லை என்று சொல்லும் அளவிற்கு உருவாக்கப்பட்டுள்ளது. ‘நரபலி’ தான் படத்தின் மைய்யக்கரு. சூப்பர் நேச்சுரல், பிளாக் மேஜிக், சைக்கலாஜிக்கல் திரில்லர் போன்ற வகையான படங்களைப் பார்ப்பவர்களுக்கு இது நிச்சயமாகப் பிடிக்கும்.
நான் நடிக்கவிருந்த ‘சைக்கோ’ படத்தினை போல் 10 மடங்கு இந்தப்படம் இருக்கும். படம் பார்ப்பவர்களை நிச்சயமாக குலை நடுங்கச் செய்யும். கர்ப்பமான பெண்களும், இளகிய மனம் கொண்டவர்களும் இந்தப்படத்தை தவிர்க்கலாம். அந்த அளவு உங்களை பயமுறுத்தும். என்ற ஆர்யன் ஷாம், தனக்கும் இயக்குநர் மிஷ்கினுக்கும் இருந்த கொடுக்கல், வாங்கல் பிரச்சனை முடிந்து விட்டது எனவும் தெரிவித்தார்.