‘அதோமுகம்’ – விமர்சனம்!

நாயகன் எஸ்.பி.சித்தார்த், தனது காதல் மனைவி நாயகி சைதன்யா பிரதாப்புடன் ஜாலியாக வாழ்ந்து வரும் வேளையில், மனைவிக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுக்க விரும்புகிறார். அது பயங்கரமான ஒரு வில்லங்கத்தில் முடிகிறது. அதாவது, தன்னுடைய மனைவியின்  செல்போனில் ஒரு ரகசிய ஆப் ஒன்றை ஸ்டோர் செய்துவிடுகிறார். அதன் மூலம் தனது மனைவியின்  ஒவ்வொரு நடவடிக்கைகளையும் அவருக்கே தெரியாமல் கண்காணித்து வருகிறார், அப்போது மனைவியின் செயல்பாடுகள், எஸ்.பி.சித்தார்த்திற்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுக்கிறது. அதாவது இருவரும் மீள முடியாத பிரச்சனையில் மாட்டிக்கொள்ள, அதிலிருந்து எப்படி விடுபட்டனர். என்பதே, ‘அதோமுகம்’ படத்தின், விறுவிறுப்பான, சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லர்!

அறிமுக நாயகனாக நடித்திருக்கும் எஸ்.பி.சித்தார்த், பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்துவதன் மூலம், ரசிகர்களுக்கு பயத்தினையும், பதட்டத்தினையும் உருவாக்குகிறார். பல காட்சிகளில் அவருக்கு ஏற்படும் உணர்வுகள், படம் பார்ப்பவர்களுக்கும் ஏற்படுகிறது.

அவரைப்போலவே,  நாயகியாக நடித்திருக்கும் சைதன்யா பிரதாப், ஆரம்பத்தில் அப்பாவியாக இருந்து அதிரடி காட்டும் இடங்களில் ரசிகர்களின் கைதட்டல்களை பெற்றுவிடுகிறார்.

அதோடு,

சித்தார்த்தின் நண்பராக நடித்திருக்கும் ஆனந்த் நாக்,  அப்பாவாக நடித்திருக்கும் மேத்யூ வர்கீஸ், ஜே.எஸ்.கவி, பிபின் குமார், சரித்திரன் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களும் கதைக்கு ஏற்றபடியான நடிப்பினைக் கொடுத்துள்ளனர்.

க்ளைமாக்ஸில் வரும் அருண்பாண்டியனின் காட்சிகள் சிறப்பு!

அருண் விஜயகுமாரின் ஒளிப்பதிவு படத்தின் கதையோட்டத்திற்கு பெரிதும் உதவி செய்திருக்கிறது! சரண் ராகவனின் பின்னணி இசையும் படத்தின் பலமாக இருக்கிறது.

ஒரு சில கதாபாத்திரங்களை மட்டுமே வைத்துக்கொண்டு, யூகிக்க முடியாத திரைக்கதையின் மூலம், ஒரு சுவாரஸ்யமான, க்ரைம், சஸ்பென்ஸ், த்ரில்லரை கொடுத்திருக்கிறார், இயக்குநர் சுனில் தேவ். திரைக்கதை சில இடங்களில் தொய்வு கொடுத்தாலும், திடீர் திருப்பங்கள் அதை சமன் செய்கிறது. க்ளைமாக்ஸ் காட்சிகள் அல்ட்டிமேட்!

மொத்தத்தில், இந்த ‘அதோமுகம்’ க்ரைம், சஸ்பென்ஸ், த்ரில்லர் படங்களை விரும்ப்பி பார்ப்பவர்களுக்கு பிடிக்கும்!