‘கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி’ சார்பில், இயக்குநர் வெற்றிமாறன் தயாரித்திருக்க, அவரது உதவியாளர் வர்ஷா பரத் இயக்கியிருக்கிறார். இதில், அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், ஹிருது ஹாருண் , டிஜே அருணாச்சலம், சஷாங்க் பொம்மி ரெட்டி பல்லி ,எம்.ஜே. ஸ்ரீராம், பார்வதி பாலகிருஷ்ணன், நேகா, இஷா, உமாதேவி, மித்ரா, விக்ரம் மோசஸ் , பிரபாகரன் , ராகுல் ரவிக்குமார், காயத்ரி, அம்ரிதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மூத்தோர் வழிவழியாகக் கடைப்பிடித்து வந்த பழக்க வழக்கங்கள், சடங்குகள், சம்பிரதாயங்களை, குறிப்பாக பெண்கள், தங்கள் நடத்தை மற்றும் உடை ஆகியவற்றில் கட்டுப்பாடுகளையும், ஒழுக்கத்தையும் கடைபிடித்து வரும் ஒரு குடும்பம். அந்த குடும்பத்தின் உறுப்பினர், அஞ்சலி சிவராமன். இவர், ஒரு முற்றிய (Adolescent Rebellion) ‘பருவக் கிளர்ச்சி’ யில் இருக்கும் இளம்பெண்.
அஞ்சலி சிவராமன், பள்ளியில் படிக்கும் சக மாணவன் ஹிருது ஹாருண் மீது மோகம் கொள்கிறார். தனிமையில் அவனுடன் நாட்களை கழிக்கிறார். இது, அஞ்சலி சிவராமனின் அம்மா சாந்தி பிரியாவிற்கு தெரிய வருகிறது. இது குறித்து அறிவுரைகள் சொல்லப்படுகிறது. ஆனால் அவர் ஏற்க மறுத்து, ஹிருது ஹாருண் உடன் வீட்டை விட்டுச் செல்ல துணிகிறார். பெற்றோர் வேறு பள்ளியில் சேர்த்து விடுகின்றனர். அதனால், கடும் கோபம் கொள்ளும் அவர், கல்லூரி வாழ்க்கையில் எனது விருப்பப்படி தான் இருப்பேன் என கூறுகிறார். அது போலவே கல்லூரிக்குள் நுழையும் அவர், சீனியர் மாணவர் ஒருவருடன் காதலுடன், உறவும் என்று வைத்து கொள்கிறார். அதுவும் நிலைக்கவில்லை! அதன் பிறகு வேலைக்கு செல்பவர் அங்கு ஒருவருடன் ‘லிவிங் டூ கெதர்’ வாழ்க்கையில் இருக்கிறார். அதுவும் ஒரு கட்டத்தில் நிலைக்கவில்லை! இதன் பிறகு அவர் என்ன செய்தார் என்பது தான், ‘பேட் கேர்ள்’ படத்தின் புரட்சிகரமான!? கதை, திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!
எல்லாப் பெற்றோர்களுமே தங்களது பிள்ளைகளை, கட்டுப்பாட்டுடன் வளர்த்து, நன்கு படிக்க வைத்து, நல்ல வேலையில் சமூகத்தில் ஒழுக்கத்துடன் வாழவைக்கவே நினைப்பார்கள். அது தவறு. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை, கட்டுப்படுத்தாமல் சுதந்திரமாக விட்டாலே அவர்கள் தங்கள் வாழ்க்கையில் சரியானதை தேர்ந்தெடுப்பார்கள்! என்ற கருத்தை வலியுறுத்தியிருக்கிறார், இயக்குநர் வர்ஷா பரத்.
இயக்குநர் வர்ஷா பரத், சடங்கு சம்பிராதயங்களை (அடிமைத்தனம்) மேம்போக்காக சொல்லிவிட்டு, படம் முழுவதும் பாலியல் சுதந்திரம் வேண்டும் என்று உரக்கச் சொல்லியிருக்கிறார். பெண்கள், இப்போது எல்லாத் துறைகளிலும் மாபெரும் இடத்தை பிடித்து, பல சாதனைகளை செய்து வரும் சூழலில், ஒழுக்கக்கேடான ‘கட்டுப்பாடற்ற பாலியல் உறவு’ வேண்டும் என்பதை ஏன் வலியுறுத்துகிறார்!?
பொருளாதார ரீதியாக வளர, பெண்கள் விடுதலை அடைய வேண்டிய தளங்கள் சில இன்னும் இருக்கின்றன. அதை விடுத்து, பாலியல் குறித்து மட்டுமே இந்தப்படம் பேசியிருப்பது வருத்தத்திற்குரியது. அதிலும், வர்ஷா பரத் போன்ற பெண் இயக்குநர் இயக்கியிருப்பது வேதனைக்குரியது!
நாயகியாக நடித்திருக்கும் அஞ்சலி சிவராமன், வியக்கத்தக்க நடிப்பினை கொடுத்திருக்கிறார். பள்ளி, கல்லூரி, அலுவலகம் என அனைத்து வயது தோற்றத்திலும், வெவ்வேறுவிதமான நடிப்பினை வெளிப்படுத்தி கை தட்டல்களை பெறுகிறார். விருதுகள் கொடுத்து கௌரவிக்கலாம்!
நாயகியி, அஞ்சலி சிவராமனின் அம்மாவாக நடித்திருக்கும் சாந்திபிரியா கதாபாத்திரத்தின் தன்மை உணர்ந்து கச்சிதமாக நடித்திருக்கிறார்.
ஹிருது ஹாருண், டிஜே அருணாச்சலம், சஷாங்க் பொம்மி ரெட்டி பல்லி ,எம்.ஜே. ஸ்ரீராம், பார்வதி பாலகிருஷ்ணன், நேகா, இஷா, உமாதேவி, மித்ரா, விக்ரம் மோசஸ் , பிரபாகரன் , ராகுல் ரவிக்குமார், காயத்ரி, அம்ரிதா ஆகியோரும் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.
ப்ரீதா ஜெயராமன், ஜெகதீஷ் ரவி, பிரின்ஸ் ஆண்டர்சன் ஆகியோரது ஒளிப்பதிவில் குறையில்லை!
அமித் திரிவேதியின் இசையில், பாடல்கள், பின்னணி இசை சூப்பர்!
ராதா ஸ்ரீதரின் படத்தொகுப்பும் படத்தின் பலமாக இருக்கிறது!
எழுதி இயக்கியிருக்கும் வர்ஷா பரத், இயக்குநராக அனைத்திலும் திறமை காட்டியிருக்கிறார். ஆனால், எடுத்துக்கொண்ட கருத்து அபத்தமாக இருக்கிறது. அவர் சம்பிரதாய அடக்குமுறைக்கு சுதந்திரம் கேட்கிறாரா? இல்லை, கட்டுப்பாடற்ற பாலியல் சுதந்திரம் கேட்கிறாரா? தெரியவில்லை!
மொத்தத்தில், ‘பேட் கேர்ள்’ – வர்ஷா பரத்.