பைரதி ரணகலின் அதிரடி பயணம், தமிழ் & மலையாளத்தில் -ல் தொடங்கியது!

கீதா பிக்சர்ஸ் சார்பில்,  தயாரிப்பாளர் கீதா சிவராஜ்குமார் தயாரிப்பில், இயக்குநர் நாரதன் இயக்கத்தில், கன்னட சூப்பர்ஸ்டார்  சிவராஜ்குமார் நடிப்பில், வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற , ஆக்சன் அதிரடி திரைப்படமான “பைரதி ரணகல்” படம்,  இப்போது தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் SUN NXT தளத்தில்  ஸ்ட்ரீமாகிறது.

பிரம்மாண்ட வெற்றி பெற்ற மஃப்டி படத்தின் ப்ரீக்குவலாக உருவான படம் தான்  “பைரதி ரணகல்”. இப்படம் தான் தமிழில் சிலம்பரசன் டி ஆர் நடிப்பில் “பத்து தல” படமாக வெளியானது என்பது குறிப்பிடதக்கது.

மஃப்டி படத்தில்,  பைரதி ரணகல் எனும் டான் கதாப்பத்திரத்தில் கன்னட சூப்பர்ஸ்டார் சிவாராஜ்குமார்  நடித்திருந்தார். இந்தக் கதாப்பத்திரத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பைத் தொடர்ந்து, அந்த கதாப்பாத்திரத்தின் முன் கதையை மையமாக வைத்து உருவான படம் தான்  “பைரதி ரணகல்”.

ஒரு சாதாரண வழக்கறிஞராக இருந்த பைரதி ரணகல், எப்படி நாடே திரும்பிப் பார்க்கும் டானாக மாறுகிறான் என்பது தான் இப்படத்தின் கதை. அதிரடி ஆக்சன் படமாக,  கமர்ஷியல் அம்சங்களுடன், அனைத்து தரப்பினரும் ரசிக்கும் படமாக உருவாகியிருந்த இப்படம் திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

நடிகர் சிவராஜ்குமார், முதன்மைப் பாத்திரத்தில்  நடித்துள்ள இப்படத்தில், ராகுல் போஸ், ருக்மணி வசந்த், அவினாஷ், சாயா சிங், தேவராஜ், ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். நவீன் குமார் ஒளிப்பதிவு செய்ய, எடிட்டராக ஆகாஷ் ஹிரேமத் பணியாற்றியுள்ளார்.

ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பாரட்டுக்களைக் குவித்த இப்படம், கன்னட மொழியில், திரையரங்கு வெற்றியைத் தொடர்ந்து, ஓடிடி வெளியீட்டிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்போது தமிழ் மற்றும் மலையாளம் ரசிகர்கள் ரசிக்கும் வகையில், இப்படம் SUN NXT ஓடிடி தளத்தில் தற்போது தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில்  ஸ்ட்ரீமாகி வருகிறது.

SUN NXT என்பது Sun TV Network-ன் OTT தளமாகும், இதில் 4000+ தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடதிரைப்படங்கள், 30+ நேரடி தொலைக்காட்சி சேனல்கள், மற்றும் பெரும் தொகையான பிராந்திய தொலைக்காட்சிநிகழ்ச்சிகள், இசை வீடியோக்கள் உள்ளன.

 

முடியாத அளவிலான பொழுதுபோக்கை அனுபவிக்க SUN NXT-ஐ இப்போது பதிவிறக்குங்கள்:

Android: http://bit.ly/SunNxtAdroid

iOS: இந்தியா – http://bit.ly/sunNXT

உலகின் பிற பகுதிகள் – http://bit.ly/ussunnxt

அல்லது பார்வையிடவும்: https://www.sunnxt.com