மாஸ்டர் கொடுத்த அதிர்ச்சியில் அமெரிக்க திரையரங்குகள்!

உலகையே புரட்டிப்போட்டுள்ள கொரனாவின் பெருந்தொற்று அச்சம் காரணமாக கடந்த பத்து மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் கடும் விதிமுறைகளுக்குட்பட்டு 50% இருக்கைகளுடன் மீண்டும் திறக்கப்பட்டு புதிய படங்கள் திரையிடப்பட்டன.

பொங்கலை முன்னிட்டு மாஸ்டர், ஈஸ்வரன், பூமி, மாறா மற்றும் புலிகுத்திப் பாண்டி ஆகிய படங்கள் வெளியானது. இதில் பூமி, மாறா படங்கள் OTT தளத்திலும், புலிகுத்தி பாண்டி தொலைக்காட்சியிலும் மஸ்டர், ஈஸ்வரன் படங்கள் திரையரங்குகளிலும் வெளியாகின.

இதில் மாநகரம், கைதி ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில், விஜய் – விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பினை உருவாக்கியிருந்தது.

ஆனால் அந்த எதிர்பார்ப்பிற்கு மாறாக ‘மாஸ்டர்’ ரசிகர்களை திருப்தி அடையச்செய்யவில்லை. இதனால் திரையரங்குகளில் அடுத்தடுத்த காட்சிகளுக்கு ரசிகர்களின் வருகை குறைந்தது. படத்தை பற்றிய விமர்சனங்களும் அதிருப்தியை வெளிப்படுத்தின.

இதனால் இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளின் வெளியீட்டு உரிமையை பெற்றிருந்த ஹம்சினி எண்டர்டையின்மெண்ட் நிறுவனம் கடும் அதிர்ச்சிக்கு உள்ளானது.

“இங்கிலாந்து, ஐரோப்பா நாடுகளில் இன்னும் திரையரங்குகள் திறக்கப்படாத நிலையில், அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் திரையரங்குகள் திறக்கப்பட்டுவிட்டதால் ‘மாஸ்டர்’ படத்தை வெளியிட்டனர்

ஆனால் ‘மாஸ்டர்’. எதிர்பார்த்ததை விட குறைவான ஆதரவைப் பெற்றுள்ளது மேலும் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் ஆட்சி மாற்ற சர்ச்சை, உருமாற்றம் பெற்ற கொரோனா அச்சுறுத்தல் படத்திற்கு மேலும் பின்னடைவை கொடுத்துள்ளது.

திரையரங்குகளுக்கு அமெரிக்காவில் 30% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி. மேலும் ‘கலிபோர்னியா’ மாகாணத்தில் இன்னும் ‘மாஸ்டர்’ திரையிடப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.