எப்போதும் கதைதான் ஹீரோ. சொல்லப்படாத.., வியப்பூட்டும் கதைகள் இங்கு நிறைய உண்டு. நம் அன்றாட வாழ்வில் சாதாரணமாக கடந்து போகும் சில விசயங்கள் கூட மிகப்பெரிய வணிகம், நிழல் உலகிற்கு தொடர்புடையதே.. இதுவரை யாரும் சொல்லாத.. அறிந்திடாத ஒரு புது உலகம் “பிளாக் கோல்டு” திரைப்படத்தின் கதைக்களம். இப்படத்தின் கதையே நடிகர் வெற்றியை தீர்மானித்தது. தொடர்ந்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் வெற்றிக்கு இப்படம் பெரிய திருப்பத்தை கொடுக்கும்.
நாயகி பிரியாலயா,லிவிங்ஸ்டன்,துளசி,A.வெங்கடேஷ்,அருள் D சங்கர்,பிக்பாஸ் அபிராமி,விஜய் டிவி ராமர்,அஜித் விக்னேஷ் மற்றும் அனைத்து கதாபாத்திரங்களும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். “பிளாக் கோல்டு” திரைப்படம் இந்த வருடம் ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டது. தற்போது இரண்டாவது கட்ட படப்பிடிப்பு அற்புதமாக நடந்து முடிந்தது. விரைவில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்கும்.
ராம்ஜியின் உதவியாளரான சந்தோஷ்குமார் கேமராமேனாக அறிமுகமாகிறார். “ஸ்மைல்மேன்” புகழ் கவாஸ்கர் அவினாஷ் இசையமைக்க..ராவணன் படத்தொகுப்பை கவனிக்க..”வீர திர சூரன்” c.s.பாலசந்தர் கலை இயக்குனராகவும்..”மெட்ரோ” மகேஷ் சண்டைப்பயிற்சியாளராகவும் அவர்களது சிறப்பான பணியை செய்து கொண்டிருக்கிறார்கள். நீண்ட வருடங்களுக்கு பின் நிஜ “சுருள் வாள்” ஆயுதத்தை பயன்படுத்தி ஒரு சண்டைக்காட்சி எடுக்கப்பட்டது.சில நிமிட அக்காட்சிக்கு 10 நாட்கள் ஒத்திகை பார்க்கப்பட்டு படமாக்கப்பட்டது. MM ஸ்டுடியோஸ் சார்பில் M.மூர்த்தி அவர்கள் பிரமாண்டமாக தயாரிக்கிறார்.படப்பிடிப்பு பரபரப்பாக தொடர்ந்து நடந்து வருகிறது.