‘JDS ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனம் சார்பில், ஜெயக்கொடி அமல்ராஜ் தயாரித்துள்ளார். எழுதி இயக்கியிருக்கிறார், மு.மாறன். இதில் ஜி.வி.பிரகாஷ்குமார், தேஜூ அஸ்வினி, ஸ்ரீகாந்த், பிந்து மாதவி, வேட்டை முத்துக்குமார், ரமேஷ் திலக், லிங்கா, ரெடின் கிங்ஸ்லி, ஷாஜி, ஹரிப்பிரியா, மற்றும் பலர் நடித்துள்ளனர்.
முதல் அரை மணி நேரம் ஜி.வி பிரகாஷ் தேஜு அஸ்வினி இவர்களது காதல், கற்பம் என, ஒரே இடத்தில் சுற்றும் கதை, அதன் பிறகு க்ளைமாக்ஸ் வரை, யூகிக்க முடியாத திருப்பங்கள், சுவாரஸ்யம் நிறைந்து ரசிக்கும்படி செல்கிறது. யார், ப்ளாக் மெயிலர்? என்பது தெரிய வரும் ஒவ்வொரு சூழ்நிலையும் ரசிகர்களை வெகுவாக ரசிக்கச் செய்கிறது. தலைப்புக்கேற்றபடி திரைக்கதை சிறப்பு!
ஜி. வி. பிரகாஷ் குமார் கதாபாத்திரத்திற்கேற்றபடி, தனது நடிப்பினை சிறப்பாக வெளிப்படுத்தி ரசிகர்களிடம் கைத்தட்டல்களை பெறுகிறார். நாயகியாக நடித்திருக்கும் தேஜு அஸ்வினி படம் முழுவதும் வந்தாலும், நடிப்பினை வெளிப்படுத்த ஒரு சில காட்சிகளே இருக்கன்றன.
ஸ்ரீகாந்த், ஓவ்வொரு முறை ஏமாற்றப்படும் போதும் மனைவி பிந்து மாதவி பிரச்சனையில் சிக்கியது தெரிந்தும், அதை கண்டு கொள்ளாமல் இருப்பது என அனைத்து ரசிகர்களையும் ஈர்க்கும் வண்ணம் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார்.ஶ்ரீகாந்தின் மனைவியாக காதலனுக்கு பயந்தபடி, குற்ற உணர்ச்சியுடன் கணவனுடன் இருப்பது, குழந்தையை காணாமல் துடிப்பது என அனைத்து காட்சிகளிலும் நன்றாக நடித்திருக்கிறார்.
மற்றபடி படத்தில் நடித்த லிங்கா, வேட்டை முத்துக்குமார், ரமேஷ் திலக், ரெடின் கிங்ஸ்லி, ஷாஜி, ஹரி பிரியா ஆகியோரும் தங்களுடைய பங்கினை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் சாம் சி.எஸ், காட்சிகளுக்கேற்றபடி இசையமைத்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் கோகுல் பினாய் ஒளிப்பதிவு நன்றாக இருக்கிறது.
இயக்குநர் மு.மாறன், இதுவரை இயக்கிய படங்களில், ‘பிளாக் மெயில்’ ஒரு நல்ல சஸ்பென்ஸ், க்ரைம் த்ரில்லராக இடம்பெற்றுள்ளது.