திருமணத்தின் போது வெளியான ‘ரயிலின் ஒலிகள்’ பாடல்!

லெமன் லீப் கிரியேசன்ஸ், மற்றும் நீலம் புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் ‘புளூ ஸ்டார்’. தமிழ்பிரபா திரைக்கதை, வசனம் எழுத, இயக்குனர் பா.இரஞ்சித்தின் உதவி இயக்குனர் ஜெய்குமார் இந்த படத்தினை இயக்கியிருக்கிறார்.

அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன் இருவரும் இணைந்து நடித்துள்ள “புளூ ஸ்டார் ” படத்தின் முதல் பாடலை, இன்று நடைபெற்ற அவர்களின் திருமணத்தினை முன்னிட்டு படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இவர்களுடன் சாந்தனு, பிரித்வி, திவ்யா துரைசாமி, லிசி ஆண்டனி, அருண் பாலாஜி, மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கிரிக்கெட் விளையாட்டை மையமாகக் கொண்ட கதை களத்துடன் உருவாகியிருக்கும் படம் புளூ ஸ்டார்.

தமிழ் அழகன் ஒளிப்பதிவு செய்திருக்க, கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார்.