பாபிசிம்ஹா , காஷ்மீரா பர்தேஷி நடிக்கும் புதிய படம்! 

Bobby simha next film

‘SRT எண்டெர்டெயின்மெண்ட்’ ,’ முத்ராஸ் பிலிம் பேக்டரி’ நிறுவனங்கள்  இணைந்து தயாரிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று நடந்தது.

பாபிசிம்ஹா ஹீரோவாகவும்,  அவருக்கு ஜோடியாக  நடிகை காஷ்மீரா பர்தேஷி நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையோடு பிரம்மாண்டமாக துவங்கியது. இதன் துவக்க விழாவில் படக்குழுவினர் உட்பட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

வித்தியாசமான கதைக்களத்தை  கையில் எடுத்துள்ள, ரமணன் புருஷோத்தமா இப்படத்தை எழுதி இயக்குகிறார்.

ராஜேஷ் முருகேசன் இசையமைக்க, அதிரடி சண்டைக்காட்சிகளுக்கென பெயர் பெற்ற ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா சண்டைப்பயிற்சியை கவனிக்கிறார். ஒளிப்பதிவு பொறுப்பை சுனில்SK ஏற்றுள்ளார்.  பேட்டை, இறைவி போன்ற படங்களுக்கு எடிட்டராக இருந்து ஜிகர்தண்டா படத்திற்கு தேசிய விருதும் பெற்றுள்ள  எடிட்டர் விவேக் ஹர்ஷன் இப்படத்தின் எடிட்டராக பொறுப்பேற்றுள்ளார்.

படத்தின் மொத்த புரொடக்ஷன் விசயங்களையும்  தன் பொறுப்பில் ஏற்றுள்ளார் நாகராஜ்RK . ஒரு படத்தின் பூஜையில் இருந்து ரிலீஸ் வரையில் பப்ளிசிட்டி மிக முக்கியம். அப்பொறுப்பை டூனிஜான் ஏற்றுள்ளார்.