உலக மக்களின் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் பிரச்சனை தான். உடல் பருமனை கட்டுக்குள் வைக்க பலரும் பல விதத்தில் முயற்சி செய்கின்றனர்.
அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் உடல் எடையை குறைப்பதற்காக கிரையோமேட்டிக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பெரிய அளவில் வெற்றிபெற்றுள்ளனர். இந்த தொழில்நுட்பத்தை kolors நிறுவனம் இந்தியாவில் அறிமுகபடுத்தியுள்ளது.
கிரையோமேட்டிக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடிகை ஈஷா தியோல் தனது உடல் எடையை கிட்டத்தட்ட 17 கிலோ வரை குறைத்துள்ளார். இதுகுறித்து இன்று சென்னையில் நடந்த கலர்ஸ் நிறுவனத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அவர், கிரையோமேடிக் தொழில்நுட்பம் மற்றும் கைலான் தயாரிப்பு குறித்து தன்னுடைய அனுபவங்களை கூறியதாவது..
“அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் இந்த கிரையோமேட்டிக் தொழில்நுட்பம் இருப்பது குறித்து கேள்விப்பட்டிருக்கிறேன். தற்போது இந்தியாவிலும் இந்த தொழில்நுட்பம் வந்துவிட்டது உண்மையிலேயே மிகப்பெரிய விஷயம். எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.
பொதுவாக, பிரசவத்திற்குப் பிறகு பெண்கள் எல்லோருக்கும் ஏற்படுவது போல, எனக்கும் உடல் எடை அதிகரிக்கவே செய்தது.. எனது நண்பர்கள் வட்டாரத்தில் கிரையோமேடிக், தொழில்நுட்பத்தில் எடை குறைப்பது குறித்து விசாரித்தபோது தான், இங்கே கலர்ஸ் நிறுவனம் குறித்து தெரியவந்தது. அதன்பிறகுதான் இந்த சிகிச்சை முறைக்குள் அடி எடுத்து வைத்தேன். அது மிகப்பெரிய பலனை தந்ததுடன் நல்ல அனுபவமாகவும் இருந்தது. எடை குறைவது கண்கூடாகவே தெரிந்தது.
அதேபோலத்தான் படப்பிடிப்பு, மேடை நிகழ்ச்சிகள், வெளியூர் பயணங்கள் என சுற்றிக்கொண்டே இருக்கும்போது, எனது சருமத்தை பராமரிப்பதும் கூந்தல் உதிர்வதை தவிர்ப்பதும் பெரிய சவாலாக இருந்தது. அப்போதுதான் கைலான் தயாரிப்புகள் பற்றி தெரியவந்தது. அவற்றில் நமக்கு தேவையான இயற்கையான மூலப்பொருட்கள் மட்டுமே சேர்க்கப்பட்டு இருந்தது. அது மட்டுமல்ல, ரசாயன பொருட்களோ அல்லது விலங்குகள் சம்பந்தப்பட்ட பொருட்களோ அதில் சேர்க்கப்படவில்லை என்பதால் எனக்கு அவற்றை பயன்படுத்துவதற்கு வசதியாக இருந்தது” என்றார்.
கலர்ஸ் நிறுவனத்தின் சிஇஓ சிவாஜி பேசும்போது, “கடந்த 16 வருடங்களாக இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறோம். இதை தொடங்கிய சமயத்தில் திருமணத்திற்காக, தாய்மை அடைவதில் உள்ள உள்ள சிரமங்களை தவிர்ப்பதற்காக, அரசாங்க பணிகளில் சேருவதற்காக கூட, தங்களது உடல் எடை பிரச்சனையாக இருக்கிறது என அதை குறைப்பதற்கு பல பேர் எங்களை அணுகினார்கள்..
இந்த கிரையோமேடிக் தொழில்நுட்பம் மூலமாக, திரையுலகப் பிரபலங்களான ரம்பா, பிரியாமணி, மதுபாலா உள்ளிட்ட பலர் எடை குறைப்பு செய்து, மீண்டும் திரையுலகில் தங்களுக்கான வாய்ப்புகளை பெற்றுள்ளனர்.
அந்த வகையில் பாலிவுட் நடிகை ஈஷா தியோல் அவர்களும், எங்களது இந்த தொழில்நுட்பம் பற்றிக் கேள்விப்பட்டு எங்களை அணுகினார். தீவிர பயிற்சிக்குப் பிறகு, கிட்டத்தட்ட 17 கிலோ வரை எடையை குறைத்துள்ளார்.
அதுபோல சருமம் மற்றும் கூந்தல் பாதுகாப்பிற்காக கைலான் என்கிற பெயரில் 16 விதமான தயாரிப்புகளை உருவாக்கி உள்ளோம். இதை வெறும் அழகை பாதுகாக்கும் முயற்சியாகவோ அல்லது வியாபாரமாகவோ மட்டும் கருதாமல், சமுதாயத்திற்கு பயன்படும் ஒரு செயலாகவே மேற்கொண்டு வருகிறோம்.” என கூறினார்.