All in Pictures T. விஜயராகவேந்திரா வழங்க, இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில், நடிகர் அருண் விஜய், ரெஜினா காஸன்ட்ரா நடித்துள்ள படம், ‘பார்டர்’. வரும் அக்டோபர் 5 ஆம் தேதி இப்படத்தினை 11:11 Production சார்பில் Dr. பிரபு திலக் வெளியிடுகிறார்.
யானை, தமிழ் ராக்கர்ஸ் என தொடர்ந்து வசூல் ரீதியாக வெற்றிப்படங்களை கொடுத்து வரும் நடிகர் அருண் விஜய் நடித்து இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் வெளியாகவுள்ள பார்டர் படத்தின் ட்ரெய்லர் வெளியான நிலையில் இப்படத்திற்கு ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு உருவாகி வருகிறது.
இது குறித்து திரையரங்க உரிமையைப் பெற்றுள்ள 11:11 Production Dr. பிரபு திலக் கூறுகையில்…
சிறந்த பொழுதுபோக்குடன் பார்வையாளர்களின் ரசனைக்கேற்ப படங்களை வெளியிடுவதே எங்கள் நோக்கம். சந்தேகத்திற்கு இடமின்றி, பார்டர் படம் அனைத்து ரசிகர்களையும் திருப்தி படுத்தும். இயக்குநர் அறிவழகன், இப்படத்தில் உச்சம் தொட்டுள்ளார். இந்த திரைப்படத்தில் ஈடுபட்டுள்ள தொழில் நுட்ப திறமையாளர்களின் அருமையான உழைப்பு, அருண் விஜய் சாரின் அற்புதமான நடிப்பு படத்தினை மிகச்சிறந்ததாக மாற்றியுள்ளது. நாங்கள் இப்படத்தினை மிகப்பெரிய அளவில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். என்றார்.