முல்லை கோதண்டம், விஜய் டி.வி.பாலா நடிக்கும் “பிரம்ம முகூர்த்தம்”

பிரபல தொழில் அதிபரான பி. செந்தில்நாதன் ‘கே.வி.மீடியா நிறுவனம்’ சார்பில் தயாரிக்கும் படம்  ” பிரம்ம முகூர்த்தம்”. இப் படத்தின் கதை, திரைக்கதை எழுதி டி.ஆர்.விஜயன் டைரக்ட் செய்கிறார்.  இதில் விஜய் விஷ்வா, மனோஜ்குமார், இருவருடன் முல்லை கோதண்டம், விஜய் டி.வி.பாலா, உட்பட மேலும் பல நகைச்சுவை நடிகர்களும் இதில் நடிக்கின்றனர்.

பி. முகமது ஜாபர் வசனம் தீட்ட, சினேகன், சி.பாலமுருகன், ராஜா மூவரின் பாடல்களுக்கு ஸ்ரீசாஸ்தா இசையமைக்கிறார். பம்மல் ரவி சண்டைப் பயிற்சியையும், கேசவ் நடன பயிற்சியையும், ப்ரியன் படத்தொகுப்பையும், சேகர் கலையையும், இ.கே.நவ்சாத் ஒளிப்பதிவையும், ஜெ. மணி தயாரிப்பு நிர்வாகத்தையும் கவனிக்கின்றனர்.

“பிரம்ம முகூர்த்தம்” படம் குறித்து அதன் இயக்குனர் டி.ஆர்.விஜயன்  கூறியதாவது…

” மாலை 6 மணிக்கு துவங்கி மறுநாள் காலை 6.மணிவரை நடைபெறும் நகைச்சுவை கலந்த காதல் படத்தின் கதை திரைக்கதை எழுதி டைரக்ட் செய்கிறேன். பிரபல முன்னணி கதாநாயகி இதில் நாயகியாக நடிப்பதற்கும், முன்னனியில் பிரபல நான்கெழுத்து நகைச்சுவை நடிகர் முக்கிய வேடத்தில் நடிப்பதற்கும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.  தேனி,கம்பம், போடி, ஏற்காடு மற்றும் சென்னையிலும் இதன் படப்பிடிப்பை நடத்தி மார்ச் மாதம் திரைக்கு வருவதற்கு உருவாகும் இதற்கு  ” பிரம்ம முகூர்த்தம்” என்று பெயர் வைத்துள்ளோம். தொழில் அதிபர் பி.செந்தில்நாதன் கே.வி.மீடியா நிறுவனம் சார்பில் இதை தயாரிக்கிறார்” என்று இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, எழுதி இயக்கும் புதியவரான டி.ஆர். விஜயன் கூறினார்.