60 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

2022-23ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

2022-23ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் ஹைலைட்ஸ்!

டிஜிட்டல் பொருளாதாரத்தை வளப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

“நாம் கொரோனா காலக்கட்டத்தில் வளர்ச்சியை நோக்கி பயணித்து வருகிறோம்; தொலைநோக்கு திட்டங்களுடன் நாம் பயணித்து வருகிறோம்”

60 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள்

5 ஆண்டுகளில் 60 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க இலக்கு

ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகள் முழுமையாக தனியாருக்கு பரிமாற்றம் செய்யப் பட்டுள்ளது

ஏழைகள் நடுத்தர மக்களின் முன்னேற்றத்தை மனதில் கொண்டு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது

ஏழை மக்களுக்கு எரிவாயு வசதி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது

வெளிப்படைத் தன்மையுடன் நிதிநிலை அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

400 புதிய வந்தே பாரத் ரயில்கள் அடுத்த 3 ஆண்டுகளில் பயன்பாட்டுக்கு வரும்

நாட்டின் பொருளாதாரம் மீட்சிப் பாதையில் பயணிக்கிறது – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

அடுத்த 25 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன

வேளாண் ஏற்றுமதிக்கு ரயில்வே துறையை திறம்பட செயல்படுத்த நடவடிக்கை

நடப்பு நிதியாண்டில் 25,000 கி.மீ அளவுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் விரிவுப்படுத்தப்படும் – நிதியமைச்சர்

மலைப் பகுதிகளில் போக்குவரத்து மற்றும் தொடர்பு வசதியை மேம்படுத்த தனியார் பங்களிப்புடன் திட்டம் – நிதியமைச்சர்

அவசரகால கடனுதவி திட்டம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிப்பு – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

அவசரகால கடனுதவி திட்டம் மூலம் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு கூடுதல் நிதியுதவி – நிதியமைச்சர்

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இணைய வழி பாடத்திட்டம் ஊக்குவிக்கப்படும் – நிதியமைச்சர்

அனைத்து மாநில மொழிகளிலும் மாணவர்கள் டிஜிட்டல் வழியில் கல்வி கற்க புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது

நாட்டின் பல்வேறு பகுதிகளில் டிஜிட்டல் பல்கலைக்கழகம் உருவாக்கப்படும்

கல்வி ஒளிபரப்பிற்காக 200 டிவி சேனல்கள் உருவாக்கப்படும் – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்