காலேஜ் குமார் – விமர்சனம்!

இயக்குனர் ஹரி சந்தோஷ் இயக்கத்தில் விக்கி வருண், சம்யுக்த ஹெக்டே நடிப்பில்  கன்னடத்தில் வெளியாகி  வெற்றி பெற்ற படம்  ‘காலேஜ் குமார்.  இந்தப்படத்தை அதே பெயரிலிலேயே தமிழில் ரீமேக் செய்துள்ளனர்.  இதில் இளையதிலகம் பிரபு, மதுபாலா,  ராகுல் விஜய், பிரியா வட்லமணி, மனோபாலா ஆகியோர் நடித்துள்ளனர்.  கன்னட படத்தை இயக்கிய ஹரி சந்தோஷே தமிழ் ‘காலேஜ் குமார்’ படத்தையும் இயக்கியுள்ளார். பத்மநாபா, எம்.ஆர்.பிக்ச்சர்ஸ் சார்பில் தயாரித்துள்ளார்.

பிரபு தன்னுடைய மகன் படித்து ஒரு ஆடிட்டராக வரவேண்டும். என்பதே அவரது ஆசை லட்சியம், சவால்! ஏன்? எதற்கு? என்பதும், அவரே காலேஜுக்கு சென்று படிக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது ஏன்? என்பதும் தான் படத்தின் கதை, திரைக்கதை, க்ளைமாக்ஸ்!

‘பாஞ்சாலங்குறிச்சி’ படத்தின் மூலமாக ரசிகர்களை மகிழ்வித்த பிரபு-மதுபாலா ஜோடி நீண்ட நாட்களுக்கு பிறகு இணைந்தது ‘காலேஜ் குமார்’ படத்தின் பலம். கள்ளம் கபடமில்லாத அப்பா, அம்மவாக இருவரும் நிறைவாக நடித்துள்ளனர். காலேஜ்ஜுக்குள் ஸ்டுடன்டாக நுழையும் பிரபு அடிக்கும் லூட்டி! தூள்!

ராகுல் விஜய், பிரியா வட்லமணி இவர்களுக்கிடையேயான ரொமேன்ஸ் நைஸ்! நாசர், மனோபாலா என நடித்த அனைவரும் அவர்களுக்கான பங்ககளிப்பை செய்துள்ளனர். இளைஞர்களுக்கும், பெற்றோர்களுக்குமான இடைவெளியினை அழகாக படம்பிடித்துள்ளார் இயக்குனர்.

காதல், அன்பு, பாசம், கோபம், ஏமாற்றம் என சம கலவையில் உருவாகியுள்ள குடும்பத்தோட பார்க்ககூடிய படம் காலேஜ் குமார்.

சாதிப்படங்களுக்குள் சிக்கித் திணறும் சினிமா ரசிகர்களுக்கு சுமாரான ‘காலேஜ் குமார்’ சூப்பராக இருக்கும்.