ரஜினியை நக்கலடித்த காட்சி நீக்கப்படும்! – ஐசரி கணேஷ்

‘ஜெயம் ரவி,காஜல் அகர்வால்,சம்யுக்தா ஆகியோர் நடிப்பில் பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ள படம் ‘கோமாளி’. வேல்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். பல வருடங்களாக கோமாவில் இருப்பவருக்கு நினைவு திரும்பும் போது அவரை சுற்றி மாறியுள்ளவற்றை அவரால் எதிர் கொள்ள முடியாமல் போராடுவதும் பின்னர் எப்படி சகஜமான நிலைக்கு திரும்புகிறார் என்பது தான் இப்படத்தின் கதை.

அன்மையில் வெளியான கோமாளி படத்தின் ட்ரைலரில் ரஜினியின் அரசியல் பிரவேஷத்தை நக்கலடித்து ஒரு காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இதனால் கடும் கோபத்திற்கு ஆளான ரஜினி ரசிகர்கள் தங்களது எதிர்ப்பை சமூக வலை தளங்களில் பதிவு செய்தனர். இந்த காட்சி குறித்து நடிகரும், மக்கள் நீதி மையத்தின் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் தன்னுடைய அதிருப்தியை படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷிடம் தெரிவித்தார்.

பல்வேறு தரப்பிலும் இருந்து எழுந்த எதிர்ப்பின் காரணமாக ரஜினியை நக்கல் அடிக்கும் அந்த சர்ச்சைக்குரிய காட்சி நீக்கப்படுவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ட்ரைலர் வெளியிட்ட கடந்த 37 மணி நேரத்தில் 3.7 மில்லியன் பார்வையாளர்களுக்கு மேல் இதை பார்த்து வருகின்றனர்.