திரளெபதி ரிலீஸ் – விநியோகஸ்தர்கள் மகிழ்ச்சி!

வருகிற பிப்ரவரி 28 அன்று வெளி வரவிருக்கின்ற படங்களின் பட்டியலில் அனைத்து தரப்பினராலும் கூர்ந்து கவனித்து வரக்கூடிய திரைப்படமாக ‘திரௌபதி  இடம் பெற்றுள்ளது.  இயக்குனர் மோகன்.G தயாரித்து இயக்கியிருக்கும் குறைந்த பட்ஜெட்  படம்.

 “ஜாதிகள் உள்ளதடி பாப்பா” என்கிற அடைமொழியோடு வெளியான இப்படத்தின் ட்ரைலர், சுமார் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரான  ரஜினியின்  தர்பார்  பட டிரெய்லர் பரபரப்பை  பின்னுக்குத்தள்ளி  அனைத்து  சமூக வலை தளங்களிலும், பொது வெளியிலும் விவாத பொருளாக மாறியது. ஒரு வார காலம் ஒன்றரை கோடியில் தயாரான திரெளபதி  சமூக வலை தளங்களை ஆக்கிரமித்து க்கொண்டது . அதே போல் இந்த வாரம் வெளியாகும் படங்களை பின்னுக்குத்தள்ளி முதலிடத்தை ‘திரௌபதி’ ஆக்கிரமிப்பாள். என்று விநியோகஸ்தர்கள் வட்டாரம் மகிழ்ச்சியில் உள்ளது.