இயக்குநரா நம்மள மிரட்டுன லோகேஷ் கனகராஜ், இப்போ முதன்முறையா ஸ்கிரீனுக்கு முன்னாடி ஹீரோவா என்ட்ரி கொடுத்திருக்க படம் தான் இந்த ‘டிசி’ (DC). அருண் மாதேஸ்வரன் டைரக்ஷன்ல, அனிருத் மியூசிக்ல செம ஹைப்ல ரிலீஸாகியிருக்க இந்த படத்தோட திரை விமர்சனத்த இப்போ பாப்போம்!
சின்ன வயசுலயே தெரியாம பண்ணுன கொலையால ஜெயிலுக்குப் போயிட்டு வர்ற ஒரு ரஃப்பான இளைஞனோட கரடுமுரடான லைஃப் தான் இந்த படத்தோட பேஸ். அம்மாவை இழந்த நம்ம ஹீரோ, அப்பாவோட பாசத்துக்காக ஏங்கி தவிக்கிறாரு. அந்த டைம்ல அவரோட கஷ்டமான வாழ்க்கையில லவ்வும் வருது.
அவரு பண்ணுன சில தப்புங்களுக்காக போலீஸ் அவரோட கேங்கையே தீவிரமா துரத்துறாங்க. அப்படி போலீஸ்கிட்ட இருந்து தப்பிச்சு ஓடுறப்போ தான் சஞ்சனா ஏ.கே-வோட நட்பு கிடைக்குது. அவங்களால நம்ம ஹீரோவோட மைண்ட் செட் மாறப்போற நேரத்துல, எதிர்பாராத விதமா போலீஸ் நடத்துற துப்பாக்கிச் சூட்டுல சஞ்சனா இறந்துடுறாங்க.
அங்க இருந்தும் தப்பிச்சு ஓடுற லோகேஷ், நரக வேதனை அனுபவிச்சுட்டு இருக்குற வாமிகா கபிய பாக்குறாரு. அவங்களோட நிலைமைய புரிஞ்சுக்கிட்டு அந்த கொடுமையில இருந்து காப்பாத்துறாரு. கடைசியில, போலீஸால தனக்கு வந்த அத்தனை கஷ்டங்களுக்கும் நம்ம ஹீரோ எப்படி ரிவெஞ்ச் எடுக்குறாரு? அப்படிங்கிறது தான் மீதிக்கதை.
டைரக்டர் அருண் மாதேஸ்வரன்னாலே நமக்கு ஞாபகம் வர்றது இரத்தமும் சதையும் கலந்த செம ராவான சீன்ஸ் தான். இந்த படத்துலயும் கை, கால் துண்டாகுற அளவுக்கு வயலன்ஸ் கொஞ்சம் தூக்கலாவே இருக்கு. ஆனா, இந்த தடவை அந்த கொடூரமான சண்டைக் காட்சிகளை கூட அனிருத்தோட வேற லெவல் பிஜிஎம்-ஆல நம்மள ரசிச்சு பார்க்க வச்சிருக்காரு டைரக்டர்.
அதுமட்டும் இல்லாம, படம் முழுக்க ரத்தக் கறையா இருந்தாலும் நடுவுல வர்ற தேவதாஸ் – சந்திரா ஜோடியோட லவ் சீன்ஸ் செம க்யூட்! அந்த காதல் காட்சிகள் அப்படியே நம்மள வயலன்ஸ்ல இருந்து மாத்தி, ஒரு மென்மையான ஃபீலுக்குள்ள கூட்டிட்டு போயிடுது. “அதிகாரத்துல இருக்குறவங்க எளிய மக்களை அடக்க நினைக்கும் போது திருப்பி அடிக்கிறது தப்பே இல்லை” அப்படிங்கிற மெசேஜையும் இயக்குநர் ரொம்ப ஸ்ட்ராங்கா சொல்லியிருக்காரு.
கேமராவுக்கு பின்னாடி நின்னு வித்தை காமிச்ச லோகேஷ் கனகராஜ், இப்போ ‘தேவதாஸ்’ அப்படிங்கிற கேரக்டர்ல மாஸா அறிமுகமாகியிருக்காரு. கேரக்டருக்கு ஏத்த பாடி லாங்குவேஜ், அளவான நடிப்புன்னு சூப்பரா பண்ணியிருக்காரு. முக்கியமா ஃபைட் சீன்ஸ்ல மனுஷன் சும்மா அசாத்திய வேகம் காட்டி தியேட்டரை அதிர வச்சிருக்காரு!
ரொம்ப கஷ்டப்படுற பொண்ணா வர்ற வாமிகா கபி (சந்திரா), பெரிய டயலாக்ஸ் இல்லாமலேயே தன்னோட கண்ணுலயும் பாடி லாங்குவேஜ்லயும் அந்த வலிய அழகா காமிச்சிருக்காங்க. இன்னொரு ஹீரோயினா வர்ற சஞ்சனா ஏ.கே கொஞ்ச நேரமே வந்தாலும், அவங்களோட கேரக்டர் முடியுற விதம் தியேட்டரை விட்டு வெளிய வந்த பிறகும் மனச கனக்க வைக்குது.
இவங்களோட தலைவாசல் விஜய், கஸ்தூரி ராஜா, கிரிஷ் ட்ய்ஹயால், அவினாஷ் ரகுதேவன், ஜவஹர் சக்தினு படத்துல நடிச்ச எல்லாருமே தங்களுக்கு கொடுத்த ரோலை ரொம்ப கச்சிதமா செஞ்சிருக்காங்க.
படத்தோட ஆகப்பெரிய பிளஸ்ஸே நம்ம அனிருத்தோட மியூசிக் தான்! படம் முழுக்க ரத்தமும் வன்முறையுமா இருந்தாலும், அதை நம்ம எந்த ஒரு நெருடலும் இல்லாம ரசிக்க முடியுதுன்னா அதுக்கு அனிருத்தோட பின்னணி இசை தான் முக்கிய காரணம். ஒவ்வொரு சீனோட எமோஷனையும் தன்னோட மியூசிக்கால நெக்ஸ்ட் லெவலுக்கு கொண்டு போயிருக்காரு ராக்ஸ்டார்.
கேமராமேன் முகேஷ்.ஜி ஃபைட் சீன்ஸ ரொம்ப பிரம்மாண்டமா காமிச்சிருக்காரு. படம் முழுக்க ஒரே மாதிரியான கலர் டோனை (Color Palette) யூஸ் பண்ணி நம்மள படத்துக்குள்ளயே வச்சிருக்காரு. டிஃபரண்டான கேமரா ஆங்கிள்ஸ் மூலமா சாதாரண சீன்ஸ கூட சுவாரஸ்யமாக்கியிருக்காரு.
இவ்வளவு வயலன்ஸ் இருக்குற படத்தை கதையோட ஓட்டத்துக்கு ஏத்த மாதிரி கிரிஸ்ப்பா எடிட் பண்ணியிருக்காரு எடிட்டர் ஜி. கே. பிரசன்னா. தேவையற்ற சீன்ஸ் எதுவும் இல்லாம படம் பார்க்க நீட்டா இருக்கு.
வயலன்ஸ்க்கு நடுவுல மனசை உருக்குற தேவதாஸ் – சந்திரா ஜோடியோட லவ்.படத்தோட தரத்தை இன்டர்நேஷனல் லெவலுக்கு மாத்துன அனிருத் பிஜிஎம் & முகேஷ் ஜி கேமரா.அடக்குமுறைக்கு எதிரா எளிய மக்கள் திருப்பி அடிக்கணும்ன்ற டைரக்டரோட ஆழமான அரசியல்.ஹீரோவா லோகேஷ் கனகராஜோட மிரட்டலான ஃபைட்ஸ் & ஆக்டிங். இதெல்லாம் படத்தோட பிள்ஸ்ஸா இருக்கு.
படம் முழுக்க ரத்தம் தெறிக்கிறது, கை கால் வெட்டுப்படுற சீன்ஸ் இருக்குறதால, ஃபேமிலி ஆடியன்ஸுக்கும் கொஞ்சம் பலவீனமான இதயம் உள்ளவங்களுக்கும் இது லேசா தலைவலியை தரலாம்.
போலீஸோட அத்துமீறலுக்கு எதிரா ஒரு சாதாரண மனுஷன் நடத்துற இந்த ஆக்ஷன் வேட்டை, ஹாலிவுட் தரத்திலான மேக்கிங் மற்றும் ராவான ஆக்ஷன் படங்களை விரும்புறவங்களுக்கு கண்டிப்பா பிடிக்கும். போய் தியேட்டர்ல என்ஜாய் பண்ணுங்க!